தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

புதிய சினிமா அனுபவம்

மீரா கதிரவனின் இயக்கத்தில் கஸ்தூரிராஜா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள படம் 'ஹபீபீ'.

News image
Updated On :28 ஜூன் 2026, 4:08 am IST

மீரா கதிரவனின் இயக்கத்தில் கஸ்தூரிராஜா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள படம் 'ஹபீபீ'. இஸ்லாமியர்களின் வாழ்வியலை பேசிய குறிப்பிடத்தகுந்த படங்களில் இது முக்கியத்துவம் பெறுவதாக பரவலான பேச்சு உள்ளது. இப்படத்தின் வெற்றி விழா அண்மையில் சென்னையில் நடந்தது.

இதில் மீரா கதிரவன் பேசும் போது, 'மேடைகள் எனக்கு பழசு. ஆனால், இந்த உணர்வு புதிதாக உள்ளது. ஏனெனில், இது என் முதல் நன்றி தெரிவிக்கும் விழா. கஸ்தூரி ராஜா போன்ற பெரியவர்கள் என்னை குரு என்று சொல்வது எனக்குக் கூச்சமாக உள்ளது. இது எனக்கு முதல் முறை. என்னை சினிமாவுக்கு அனுமதித்த என் குடும்பத்துக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்குமே நன்றி.

நெருக்கடியான தருணத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்துக்குப் பணம் தந்து உதவினார். இயக்குநர் ராம் இந்தப் படத்தை தோளில் தூக்கி சுமந்த பிறகு தான் இதற்கு வெளிச்சம் கிடைத்தது. நண்பர் என்பதால் ராம் இதனை எனக்குச் செய்யவில்லை. எல்லா நல்ல படங்களுக்கும் அவர் செய்வார். இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததில் சினிமாவுக்கு மிகப் பெரும் பங்கு உண்டு. அதை மாற்ற வேண்டும் என்றால் நாம் தான் முன்வர வேண்டும். இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்தப் படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. சிலர் பேசுகிற போது 110 வருட சினிமா அனுபவத்தில் இந்த சினிமா கொடுத்துள்ள அனுபவம் மிகப் புதிது என்றார்கள். அந்த அனைவருக்கும் நன்றி'' என்றார் மீரா கதிரவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.