தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

வாழ்க்கையில் மறக்க முடியாத கதாபாத்திரம்... திருநங்கை அனுஸ்ரீ வேலன் நெகிழ்ச்சி!

திருநங்கை அனுஸ்ரீ வேலன் தனது முதல் திரைப்பட அனுபவம் குறித்து பேசியிருப்பதாவது...

Anushree Velan at the shoot of the movie '29'.

29 படத்தின் படப்பிடிப்பில் அனுஸ்ரீ வேலன். - படங்கள்: இன்ஸ்டா / அனுஸ்ரீ வேலன்.

Published On :

திருநங்கை அனுஸ்ரீ வேலன் தனது முதல் திரைப்பட அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரத்னகுமார் இயக்கிய 29 படத்தில் மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த மே.8ஆம் தேதி 29 என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இந்தப் படம் ஜூன் 5ஆம் தேதி ஓடிடியில் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த அனுஸ்ரீ வேலன் தனது கடந்து வந்த பாதையைக் கூறி மக்களிடையே கவனம் பெற்றார். யூடியூப், இன்ஸ்டாகிராமில் இன்புளூயன்ஷராகவும் புகழ்பெற்றார்.

இவர் ரத்னகுமார் இயக்கிய 29 என்ற படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கிறார். ஓடிடி வெளியீடு குறித்து அவர் பேசியிருப்பதாவது:

ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கிய ’29’ படத்தில் அங்கம் வகித்ததுக்கு மிகவும் பெருமிதம் கொள்கிறேன். இந்தப் படத்தில் மாவட்ட ஆட்சியராக நடிக்க அற்புதமான வாய்ப்பு கிடைத்தது.

ஒரு திருநங்கையாக திரையில் மதிப்புமிக்க கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

என்னை நம்பியதற்கும் மறக்க முடியாத வாய்ப்பை ஏற்படுத்தியதுக்கும் இயக்குநர் ரத்னகுமார், துணை இயக்குநர்கள், படக்குழு அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இந்தப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது இதயம் கணிந்த நன்றி.

இந்தக் கதாபாத்திரம் எனது வாழ்க்கையில் எப்போதும் சிறப்பு வாய்ந்தது. இந்தப் படத்தில் பங்கு வகித்ததுக்கு நான் உண்மையில் கௌரமாக நினைக்கிறேன் என்றார்.

Summary

This role will always remain special in my life says actor transgender anusrivelan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.