பொ.ஜெயச்சந்திரன்
'கதைகளைச் சொல்வேன், கட்டுரைகளை எழுதுவேன். மேடையில் பேசுவேன். ஓவியங்களை வரைவேன். திருக்குறள்களை அதிக அளவில் சொல்வேன், வேகமாக ஓடுவேன். 2023-ஆம் ஆண்டு "முத்தமிறிஞரின் முத்துமொழிக் கதைகள்' என்ற நூலுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். எனது பதின்மூன்று வயதில் 14 நூல்களை எழுதியுள்ளேன்'' என்று தனது சாதனைகளை அடுக்கிக் கொண்டே சொல்கிறார் ஹரிவர்ஷ்னி.
கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சோ.இராஜேஷ் - தனியார் கல்லூரியின் தமிழ்த் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் அ.ராஜலெட்சுமி தம்பதியின் மகளான ஹரிவர்ஷ்னி, இளம்வயதிலேயே அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
அவரிடம் பேசியபோது:
'வெங்கடாபுரத்தில் உள்ள பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி.முதல் ஆறாம் வகுப்பு வரை படித்தேன். தற்போது ஸ்ரீபல்தேவ்தாஸ் கிக்கானி வித்யாமந்திர் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். ஒன்பதாம் வகுப்பு செல்ல இருக்கிறேன்.
எனது அம்மா, நாள்தோறும் மாலை நேரங்களில் தமிழ் சார்ந்த கதைகளையும், மொழி சார்ந்த பாரம்பரிய வரலாறுகளையும் சொல்லித் தருவார். எனது தாத்தா-பாட்டியிடம் அடிக்கடி கதைகளைக் கேட்பேன். இதனால் எழுத்துப் பயணம் சிறுவயதிலே தொடங்கியது.
மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே மேடைகளில் பாரதியார், காமராஜர், ஒளவையார் போன்ற ஆளுமைகளின் வரலாறுகளைப் பேசினேன். அந்த நேரத்தில் தமிழாசிரியர் கவிதாவின் ஊக்குவிப்பு காரணமாக அடுத்தகட்டத்தில் பயணித்தேன். பள்ளியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதற்கு என்னை அடிக்கடி அழைப்பார்கள். அப்படியே மேடையில் ஏறிப் பேசுவதற்கும் பழகிவிட்டேன்.
2021-ஆம் ஆண்டு ஜனவரி 31-இல் என்னுடைய எட்டாவது வயதில், "முதல் பதினெண் கதைகள்' என்ற நூலை விஜயா பதிப்பகம் சார்பில் வெளியிட்டேன். கவியுலகப் பூஞ்சோலை இணைய வழி கவியரங்கத்தில் பங்கேற்று பேசுகிறேன்.
"பதினெண் கதைகள்', "ஜீராவும் பஜ்ஜியும்', "நிஷாசினியின் மீன் பொம்மை', "அரைபல்ல காணோம்', "மூணு கண்ணன் வந்துட்டான்', "குகைக்குள் பூதம்', "காண்டா மிருகம் எதுக்கு ஓடுது', "குக்கூ குக்கூ தவளை', "மேக்கப் போட்ட விலங்குகள்', "காட்டுக்குள் திருவிழா', "ஐந்து பூதங்கள்', "தேவதையின் அற்புத உலகம்', "முத்தமிழறிஞரின் முத்துமொழிக் கதைகள்', "ஹரிவர்ஷ்னி கதைகள்' (அழ.வள்ளியப்பா பாடல்கள் கதைகள்) உள்ளிட்ட 14 நூல்களை எழுதியிருக்கிறேன். 15-ஆவது நூலை கோடை விடுமுறையில் எழுதிவிடுவேன். இந்த நூல்களுக்கு ஓவியம் வரைந்தது எனது அக்கா வர்த்தினி.
அரசு, இலக்கிய அமைப்புகள், பொதுநல அமைப்புகளிடம் இருந்து 20-க்கும் மேற்பட்ட விருதுகளையும், 75-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், பரிசுகளையும் பெற்றுள்ளேன்'' என்கிறார் ஹரிவர்ஷ்னி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: சுரண்டை எஸ்ஆா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளி சாதனை

செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சோ்க்கை பெற அழைப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
