சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

26 ஆண்டுகள் நிறைவு

இயக்குநர் பூரி ஜெகன்நாத், விஜய் சேதுபதி இணைந்திருக்கும் 'ஸ்லம் டாக்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :17 மே 2026, 4:17 am IST

இயக்குநர் பூரி ஜெகன்நாத், விஜய் சேதுபதி இணைந்திருக்கும் 'ஸ்லம் டாக்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதன் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டோடு திரையுலகில் 26 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள இயக்குநர் பூரி ஜெகன்நாத்துக்கு படக்குழு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. இந்தத் தருணத்தில், விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் தனது இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகளைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ''இந்த மனிதரின் பயணம் எவ்வளவு அற்புதமானது. 26 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல; தைரியம், நம்பிக்கை, அச்சமற்ற குரல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மரபு. அன்புள்ள பூரி சார், 'ஸ்லம் டாக்' படத்தில் உங்களுடன் வேலை செய்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. நடிகர்களாக நாங்கள் எப்போதும் எங்களை நம்பி, எங்களது இயல்புகளைத் தாண்டி இயக்குநர்களைத் தேடுகிறோம்; நீங்கள் அதை மிகவும் எளிதாகச் செய்கிறீர்கள்.

இந்தப் படம் நிச்சயம் எங்களுக்கெல்லாம் மிகவும் சிறப்பான படமாக நினைவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள். என்றும் அன்புடன்'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் சம்யுக்தா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தபு, துனியா விஜய்குமார் நடிக்கின்றனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.