தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மூளை ஓர் அதிசயம்!

எட்டு லட்சம் ஆண்டுகளாக மனிதர்களின் மூளை பல்வேறு பரிமாணங்களை எடுத்திருக்கும் நிலையில், நாளுக்கு நாள் அதுகுறித்த ஆராய்ச்சிகள்அதிகரித்து வருகின்றன.

News image
Updated On :17 மே 2026, 4:06 am IST

எட்டு லட்சம் ஆண்டுகளாக மனிதர்களின் மூளை பல்வேறு பரிமாணங்களை எடுத்திருக்கும் நிலையில், நாளுக்கு நாள் அதுகுறித்த ஆராய்ச்சிகள்அதிகரித்து வருகின்றன. தற்போது ஆய்வாளர்களின் கவனம் நவீன மூளையின் தகவல் தொடர்பு மையத்தை நோக்கியுள்ளன. இதை அறிவியலில் டி.எம்.என். என்று அழைக்கின்றனர். அதாவது, மனிதர்கள் ஒவ்வொருவரும் தனி உலகம்தான். அவர்களது பிரக்ஞை, மூளை இயக்கத் தொடர்பு எல்லாமே தனித்துவமிக்கது.

இளம்வயதினர் 16 பேரை ஆராய்ச்சிக் குழுவினர் அழைத்து, அவர்களுக்கு 2009-இல் வெளிவந்த "டேகன்' எனும் ஹாலிவுட் திரைப்படத்தைத் திரையிட்டனர். அப்போது அவர்களின் மூளை செயல்படும் விதம்

"ஃபங்ஷனல் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங்' என்ற செயல்முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் படத்தைப் பார்க்கையில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனி உலகத்தில் இருந்தனர் என்பதையும், பிரக்ஞையற்ற நிலையில் அவர்கள் இருந்தபோது அனைவரும் ஒரே மாதிரி உணர்வைக் கொண்டிருந்தனர் என்பதையும் கண்டு அதிசயித்தனர். இதில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொருவிதமாக இயங்குகிறது.

படத்தைப் பார்ப்பவர்கள் தங்களின் சொந்தக் கதையை இணைத்துக் கொள்கின்றனர். பலர் பழைய உணர்வுகளை நினைவாற்றல் அடிப்படையில் நினைக்கத் தொடங்குகிறார்கள். சிலர் படக்காட்சிகளை தங்கள் மனப்போக்கில் "செட்' போட்டு அமைத்து மீண்டும் காண்கிறார்கள்.

இப்படி டி.எம்.என். என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது என்றால், ஒவ்வொருவரின் குணாதிசயமும் தனித்தனியானதாகும். ஒவ்வொரு மனிதனின் டி.எம்.என்.-யையும் படமாக ஆக்கினால் அவர்களைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு குறைந்தது 40 ஆயிரம் எண்ணங்களை எண்ணுகிறான்.

நவீன காலத்திய மெஷின் லேர்னிங் மாடல்கள் இப்படிப்பட்ட படங்களைத் தொகுத்து, அவற்றை மரபணுக்களுடன் தொடர்புபடுத்தி ஆய்வு நடத்தினால் மனிதனைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகப் புரிந்துகொள்ளலாம். ஒவ்வொருவரும் தனது எதிர்காலம் பற்றிச் சிந்தனை செய்ய இந்த டி.எம்.என். உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.