கரும்புள்ளி கிராமம்
வி.எஸ். பிலிம் மேக்கர்ஸ் மற்றும் அனகா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் , 'கரும்புள்ளி கிராமம்'.
வி.எஸ். பிலிம் மேக்கர்ஸ் மற்றும் அனகா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் , 'கரும்புள்ளி கிராமம்'. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராசா ஆனந்த். எஸ். ஜெயபாலா மற்றும்
ஜி. சுகன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர். தினேஷ் மாஸ்டர், யோகிபாபு, சுவேதா, 'வாழை' ஜானகி, பழ. கருப்பையா, சுப்ரமணிய சிவா, கவிதா ரவி, 'ஜெய்பீம்' மொசக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குநர் ராசா ஆனந்த் பேசுகையில், 'சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளேன். புதிதாக எதைச் சொன்னாலும், அதை உயர்த்திப் பிடிக்கும் தமிழ் ரசிகர்களுக்காக ஒரு படம் இயக்க ஆசை. அதற்காக நான் தேடி அலைந்த, தூரத்திப் பிடித்த விஷயங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்றுதான் இது.
கிராமத்துக் கதைகள் மீது எப்போதும் காதல் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. 1980- ஆம் ஆண்டுகளின் கிராமத்து வாழ்க்கைதான் எப்போதுமே அழகு. உலகம் முழுக்கப் பிழைப்புக்காகப் புலம்பெயர்ந்து அலையும் ஏராளமான மனிதர்களிடம் மிச்சம் இருப்பவை, கடந்து வந்த வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும், அந்த மண் காத்துக் கொடுத்த கலாசாரங்களும்தான்.
ஏதோ ஒரு வேகத்தில் மண்ணை விட்டு வெளியேறிய கணங்கள் செத்துப் போகிற வரைக்கும் மறக்குமா என்ன? அதை மீட்டெடுத்துப் பார்வைக்கு வைக்க ஆசை. அது நூறு சதவீதம் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இன்னும் தன் வேர்களை இழக்காத கிராமப்பகுதிகளைத் தேடிப் பிடித்துப் படமாக்கி இருக்கிறேன். இதைச் சாத்தியப்பட வைத்த அனைவருக்கும் நன்றி' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

