மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

உலகம் பலவிதம் - 29-11-2026

ஆஸ்திரியா அரசு, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள இந்தியர்களுக்காக 12 மாத கால 'வேலை மற்றும் சுற்றுலா' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On :

இளைஞர்களை ஆஸ்திரியா அழைக்கிறது

ஆஸ்திரியா அரசு, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள இந்தியர்களுக்காக 12 மாத கால 'வேலை மற்றும் சுற்றுலா' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் அந்நாட்டில் சுற்றிப் பார்க்கவும், தற்காலிகமாக வேலை செய்யவும், கல்வி பயிலவும் முடியும்.

இதற்கு முன்கூட்டியே வேலைக்கான உத்தரவாதம் தேவையில்லை. ஆனால், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் நிதி சார்ந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யவேண்டும். 90 நாள்களுக்கு மேல் தங்குவதற்கான விசா கட்டணம் 195 யூரோ (சுமார் ரூ 19,811) ஆகும். இதற்கான விண்ணப்பங்களை புதுதில்லியில் உள்ள ஆஸ்திரிய தூதரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Story image

பிரத்யேகப் படங்களை விற்கும் அதிபர் மனைவி

அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்ப், தனது பிரத்யேகப் புகைப்படத் தொகுப்பை 150 டாலருக்கு (சுமார் ரூ.13,959 ) விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல ஃபேஷன் புகைப்படக் கலைஞரும், முன்னாள் மாடலுமான வான் அன் வெர்த்தால் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 'சுயமோகம் கொண்டவர்' என மெலானியாவை சமுக வலை

தளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர். 'அமெரிக்க மக்கள் துன்பப்படும் நிலையில் நீங்கள் இதைத்தான் செய்கிறீர்களா?' என்றும் ஒருவர் சாடியுள்ளார்.

Story image

சதாம் உசேன் விமானங்கள் விற்பனை

இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் 2 போயிங் 747 ரக விமானங்களை தலா 9 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.8.34 கோடி) விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. வாங்கு

பவர்கள் ஒவ்வொரு விமானத்துக்கும் 20 சதவீதம் முன்பணமாக ரூ.1.8 லட்சம் டாலர் (சுமார் ரூ.1.66 கோடி) கட்ட வேண்டும். மேலும் மொத்த விலையில் 2 சதவீதம் சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும். கடந்த 35 ஆண்டுகளாக இந்த விமானங்கள் பயன்பாட்டில் இல்லை. ஏற்கெனவே 2010, 2023-ஆம் ஆண்டுகளிலும் இந்த விமானங்கள் விற்பனை அறிவிப்பு வெளியானது.

Story image

விபரீதத்தில் முடிந்த தகராறு

ராஜஸ்தானின் ஜோத்பூரில் இளைஞர் ஒருவரின் ஆசன வாயிலில் சிக்கியிருந்த 4 அடி நீள வாஷ்ரூம் ஜெட் ஸ்பிரே குழாயை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து அகற்றி, அவரது உயிரைக் காப்பாற்றினர்.

குளியலறையைப் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியது. சக இளைஞர்கள் சிலர் அந்தக் குழாயை இளைஞரின் அந்தரங்க உறுப்பில் செலுத்தினராம். இதனால் அவரது பெருங்குடல் கிழிந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.