
ஏன்? எதற்கு?
பாலிவுட், தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்சி பண்ணு.

பாலிவுட், தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்சி பண்ணு. இவர் அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்துக்கு ஒப்பந்தமாகியிருந்தேன். பின்னர் திடீரென நீக்கப்பட்டேன். ஏன் எனக் கேட்டபோது 'அந்த ஹீரோவின் மனைவிக்கு உங்களைப் பிடிக்கவில்லை' என்றார்கள். அந்த நடிகரின் மனைவிக்கு என்னை ஏன் பிடிக்கவில்லை என்று எனக்கு இன்றுவரை தெரியாது.
மற்றொரு படத்தில் ஏற்கெனவே ஒப்பந்தமாகி என் கால்ஷீட்டையும் ஒதுக்கிய நிலையில், எனக்குத் தெளிவான எந்தக் காரணமும் கூறப்படாமல் படத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டேன். கதாநாயகனின் அழுத்தம் காரணமாகவே நான் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதினேன். ஆனால், ஊடகங்கள் வாயிலாகவே நான் அப்படத்திலிருந்து நீக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். ராசி இல்லாத நடிகை என்ற விமர்சனத்தையும் எதிர்க்கொண்டிருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





