
புதிய தலைமைச் செயலகம்; எந்த முடிவும் எடுக்கவில்லையென்றால் அரசாணை எதற்கு? கனிமொழி கேள்வி!
புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லையென்றால் , அரசாணை எதற்கு என்ற கேள்வியை கனிமொழி எழுப்பியுள்ளது குறித்து...

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லையென்றால், அரசாணை எதற்கு என்ற கேள்வியை திமுக எம்.பி. கனிமொழி திங்கள்கிழமை (செப். 21) எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்த தவெக அரசு, சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தொடர்ந்து, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதல்வர் விஜய் இன்னும் எந்தவொரு இறுதியான முடிவையும் எடுக்கவில்லை என விளையாட்டு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் தொடர்பான தமிழக அரசின் ஆணையைக் குறிப்பிட்டு திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்திருப்பதாவது:
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதல்வர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார்.
அப்படியானால், செப். 8 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்காக?
முதல்வரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா? என்ற கேள்வியை கணிமொழி எழுப்பியுள்ளார்.
பà®à¯à®à®¿à®©à®ªà¯à®ªà®¾à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ பà¯à®¤à®¿à®¯ தலà¯à®®à¯à®à¯ à®à¯à®¯à®²à®à®®à¯ à®à®à¯à®à¯à®µà®¤à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ à®®à¯à®¤à®²à®®à¯à®à¯à®à®°à¯ à®à®©à¯à®©à¯à®®à¯ à®à®¨à¯à®¤ à®®à¯à®à®¿à®µà¯à®®à¯ à®à®à¯à®à¯à®à®µà®¿à®²à¯à®²à¯ à®à®©à¯à®±à¯ à®à®®à¯à®à¯à®à®°à¯ à®à¯à®±à¯à®à®¿à®±à®¾à®°à¯.
— Kanimozhi (à®à®©à®¿à®®à¯à®´à®¿) (@KanimozhiDMK) September 21, 2026
à®à®ªà¯à®ªà®à®¿à®¯à®¾à®©à®¾à®²à¯, 08.09.2026 à®à®©à¯à®±à¯ வà¯à®³à®¿à®¯à®¿à®à®ªà¯à®ªà®à¯à® à®à®¨à¯à®¤ à®à®°à®à®¾à®£à¯ à®à®¤à®±à¯à®à®¾à®?
à®®à¯à®¤à®²à®®à¯à®à¯à®à®°à®¿à®©à¯ à®à®ªà¯à®ªà¯à®¤à®²à¯ à®à®²à¯à®²à®¾à®®à®²à¯à®¯à¯ à®à®¤à®¿à®à®¾à®°à®¿à®à®³à¯ 25.55 à®à®à¯à®à®°à¯ நிலதà¯à®¤à¯ à®à®à¯à®¯à®¾à®³à®®à¯â¦ pic.twitter.com/qTQXo0DOQb
Summary
DMK MP Kanimozhi raised a question on Monday (Sept. 21) as to why a Government Order was issued if no decision was to be taken regarding the construction of the new Secretariat.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







