கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

குரலற்றவர்களின் குரலுக்கு நோபல்

அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் மிகவும் ஆசைப்பட்ட, எதிர்பார்த்த , 2026-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருதுக்காக, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளிப் பெண் நீதியரசர் நவநீதம் பிள்ளை தேர்நதெடுக்கப்பட்டுள்ளார்.

Updated On :

அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் மிகவும் ஆசைப்பட்ட, எதிர்பார்த்த , 2026-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருதுக்காக, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளிப் பெண் நீதியரசர் நவநீதம் பிள்ளை தேர்நதெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் 'நவி' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். உலக அமைதி, மனித உரிமைகள் பாதுகாப்பு, சர்வதேசச் சட்டத்தின் ஆட்சி, போர்க்குற்றங்களுக்கு எதிரான நீதியை நிலைநாட்டுவதில் நவநீதம் போதுமான பங்களிப்பு செய்துள்ளது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் கொடூர நிறவெறிக்கு எதிராக சட்டரீதியாகப் போராடியதுடன், நெல்சன் மண்டேலா போன்றோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நவநீதம் பங்களிப்பு செய்துள்ளார். ருவாண்டா சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தில் நீதிபதியாகப் பணியாற்றி, பாலியல் வன்முறைகளையும் இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதுவதற்கான சட்டங்கள் கொண்டுவர உதவினார்.

2008-ஆம் ஆண்டு முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகப் பணியாற்றி, உலகளவில் மனித உரிமைகளைப் பாதுகாக்கக் குரல் கொடுத்தார். இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரித்த ஐ.நா. சுயாதீன விசாரணை ஆணையத்துக்குத் தலைமை தாங்கியதும் நவ

நீதம்தான். போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நவநீதம் உரக்கக் குரல் கொடுத்து வருகிறார்.

தொழிலாளர்களாகப் புலம்பெயர்ந்தவரின் மகள்

நவி, தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் தமிழ் வம்சாவளி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். 1890-இல் நவியின் முன்னோர்கள் பிழைப்புத் தேடி தமிழ்நாட்டிலிருந்து கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தனர். நவியின் பெற்றோர்கள் சாந்தமா - நாராயணசாமி. ஏழ்மையான குடும்பத்தில் எட்டுக் குழந்தைகள். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பேருந்து ஓட்டுநரின் மகளான நவி குழந்தைப் பருவத்திலிருந்தே நிறவெறியால் பாதிக்கப்பட்டவர்.

'மனித உரிமை வழக்குரைஞராக எனது பயணம், நிறவெறி ஆட்சிக்காலத்தில் நான் எதிர்கொண்ட அனுபவங்களால் வடிவமைக்கப்பட்டது. வெள்ளையர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட பூங்காக்களுக்கோ அல்லது கடற்கரைகளுக்கோ என்னால் செல்ல முடியவில்லை. நடால் பல்கலைக்கழகத்தில், சட்ட நிறுவனங்களில் பணிபுரியும் வெள்ளையின மாணவர்களுக்கு வசதியாக வகுப்புகள் அதிகாலையிலும் இரவிலுமே நடத்தப்பட்டன.

வகுப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் வீட்டுக்குச் செல்லப் போதுமான பேருந்துக் கட்டணம் என்னிடம் இல்லாததால், நான் பெரும்பாலும் நூலகத்திலேயே அமர்ந்து நியூரம்பெர்க் வழக்கு விசாரணைகள் குறித்த ஆவணங்களைப் படித்துக் கொண்டிருப்பேன். இனவெறிக் காலத்தில் கறுப்பின மக்கள் எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியிலும், நான் நடால் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, சட்டம் படித்தேன். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் நிறைவு செய்தேன்.

படிப்பை முடித்தவுடன் வேலை தேடத் தொடங்கினேன். சட்ட நிறுவனங்களில், வெள்ளையினத்தவர் மட்டுமே பணிபுரிந்து வந்தார்கள். 'உங்களை நாங்கள் பணியில் அமர்த்த முடியாது; ஏனெனில், ஒரு கறுப்பினத்தவரிடமிருந்து வெள்ளையினத்தவர் உத்தரவுகளைப் பெறும் சூழலை நாங்கள் அனுமதிக்க முடியாது' என்று கூறினார்கள். எனவே, தனி அலுவலகம் தொடங்கி எனது பயணத்தைத் தொடங்கினேன்'' என்கிறார் நவி.

நிறத்தின் காரணமாக நவிக்கு வெள்ளையர் நீதிபதிகளின் அறைகளுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தடையை தனது சட்டத் தொழில் வாழ்க்கையைப் பாதிக்க அவர் அனுமதிக்கவில்லை. 1965-இல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்குரைஞரான கேபி பிள்ளை என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். குழந்தை பிறக்காததால், ஈஸ்வரி, காமினி என்ற இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்தனர். தனது மகள்களைப் பொதுப் பூங்காவுக்கு அழைத்துச் சென்று ஊஞ்சலில் ஆட வைத்தார் நவி.

1967-இல், நடால் பகுதியில் சொந்தமாக சட்ட நிறுவனத்தைத் தொடங்கிய முதல் வெள்ளையர் அல்லாத பெண்மணி நவிதான். இனவெறிக்கு எதிரான போராட்டக்காரர்கள், அரசியல் கைதிகளுக்காக நவி வாதாடி வந்தார்.

தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் உரிமைகளுக்காக, 1992-இல், மனித உரிமை ஆர்வலரான ஜெசிகா நியூவிருத் என்பவருடன் இணைந்து ஈக்வாலிட்டி நவ் என்ற பெண்கள் உரிமை அமைப்பை அவர் நிறுவினார். இனவெறிக் கொள்கை முடிவுக்கு வந்த பிறகு, நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார்.

தனக்காகப் போராடிய நவநீதம் பிள்ளையை உயர் நீதிமன்றத்தின் முதல் வெள்ளையரல்லாத பெண் நீதிபதியாக 1995-இல் நியமித்தார். நவி தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் முதல் வெள்ளையர் அல்லாத பெண் நீதிபதியாக உயர்ந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையராகப் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது.

ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் நவி சர்வதேச அளவிலான பரிமாணத்தை எட்டினார். 1994-இல் நடைபெற்ற இனப்படுகொலைக்குக் காரணமானவர்களை விசாரித்துத் தண்டிக்கவே இத்தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இத்தீர்ப்பாயத்தில் நவி எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். இதில் 1999 முதல் 2003 வரை அதன் தலைவராகவும் செயல்பட்டார். அதனை தொடர்ந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார்.

2008-இல், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகத்துக்குத் தலைமை தாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமை நவியை வந்தடைந்தது. அண்மையில், ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்துக்குத் தலைமை தாங்கிய நவி, காஸாவில் இனப்படுகொலை நடைபெற்று வருவதைக் கண்டறிந்து அறிவித்தார். நவி, தன்னை 'பாதிக்கப்பட்டவர்களின் குரல்' என்றும் அழைத்துக்கொள்வதில் உண்மை இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER