அமெரிக்க ஆவி
நெப்போலியன் நடித்துள்ள திரைப்படம், 'அமெரிக்க ஆவி'. முழுவதும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தமிழ்ப் படமான இதை தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கி உள்ளார்.
நெப்போலியன் நடித்துள்ள திரைப்படம், 'அமெரிக்க ஆவி'. முழுவதும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தமிழ்ப் படமான இதை தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கி உள்ளார். 'நேஷ் வில்' பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆதிஷ் உத்ரியன் இசை அமைத்துள்ளார். ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற விழாவில், ஜப்பான் நாட்டின் துணைத் தூதர் டாக்கா ஹாசி, தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து இசை, டிரெய்லரை வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார்.
விழாவில், நடிகர் நெப்போலியன் பேசும்போது, 'படத்தில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், இந்து ராஜ்குமார், ராகுல், ஹேமமாலினி, ஊர்வசி, மைதிலி என சுமார் 200 பேர் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் மிகச் சிலர் மட்டுமே நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள்.
நடித்திருக்கும் அனைவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள், டாக்டர்கள், சயின்டிஸ்ட், பேராசிரியர்கள் என பெரிய பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஒதுக்கித் தந்த நேரத்தைப் பயன்படுத்தி, 75 நாள்களில் படத்தை உருவாக்கி இருக்கிறோம். சிவாஜி நடித்த 'பாரத விலாஸ்' படத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். உலகம் முழுவதிலும் 40}க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ள இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

