கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் சவாலானது: கருணாஸ்

என்ன விலை திரைப்படம் குறித்து கருணாஸ் பேச்சு...

கருணாஸ்

Published On :

நடிகர் கருணாஸ் தான் நடித்துள்ள என்ன விலை திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ள அவர், தற்போது தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் சவால் நிறைந்த, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக வீசும் நாணயங்களை மீட்டெடுக்கும் நாணய மீட்பாளரான தவசிமுத்து கதாபாத்திரத்தில் இந்த படத்தில் கருணாஸ் நடித்துள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், வித்தியாசமான வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்ட கதையையும், கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான போராட்டத்தையும் பற்றி பேசுகிறது.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார், “தவசிமுத்து கதாபாத்திரம் என்னிடம் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்த்தது. அவரது வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலுடன் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் படிப்படியாக அவரை மிகப்பெரிய போராட்டத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. இந்தக் கதாபாத்திரத்தை எனக்குச் சிறப்பானதாக மாற்றியது, அவர் கடந்து செல்லும் உணர்வுப்பூர்வமான பயணம்தான். ‘என்ன விலை’ திரைப்படத்தின் கருவாக வாழ்வாதாரம், கண்ணியம், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை பேசுகிறது. ஒரு நடிகராக இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

Actor Karunas has spoken about the film Enna Vilai, in which he has acted.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER