
உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாகும் இருளன்!
இருளன் திரைப்படம் குறித்து...

இருளன் - படம்: எக்ஸ் / முத்தையா.
நடிகர் அருண் விஜய் இருளன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் ’இருளன்’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் ஆக்ஷன் கதையாக அதிக சண்டைக் காட்சிகளுடன் உருவாகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டு ஓய்வில் இருந்தார். தற்போது, மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், நிகழ்வில் பேசிய நடிகை அருண் விஜய், “என்னுடைய அடுத்த திரைப்படத்திற்கு நேரம் எடுத்துக்கொண்ட போது, இயக்குநர் முத்தையா இருளன் கதையோடு வந்தார். அவரிடமிருந்து இப்படியொரு திரைப்படமான என இருளன் குறித்து ஆச்சரியப்படுவீர்கள். இது உண்மைச் சம்பவத்தைத் தழுவி உருவாகிறது. படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால் ஒரு மாதம் ஓய்வில் இருந்தேன்.” எனக் கூறியுள்ளார்.
அருண் விஜய் இறுதியாக நடித்த ரெட்ட தல மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது குறிப்பிடத்தக்கது.
Actor Arun Vijay has spoken about the movie Irulan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






