
மிஷ்கினுடன் நடிக்க பயம்
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'ஐ அம் கேம்'.
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'ஐ அம் கேம்'.
'ஆர்.டி.எக்ஸ்' படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் பட விளம்பர நிகழ்ச்சியில் சம்யுக்தா விஸ்வநாதன் பேசியபோது, 'இந்தத் திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான, உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி. சிறுவயதிலிருந்தே சினிமா பார்த்து வளர்ந்தேன். இதனால் திரையில் என்ன எமோஷன் உள்ளதோ, என்ன உணர்வு ஏற்படுகிறதோ, அதே உணர்வை ஆடியன்ஸூக்குக் கடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது.
இயக்குநர் நஹோஸ் கதையை விவரித்தபோதே, இந்தப் படத்தில் நிச்சயமாக நான் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். மிஷ்கினுடன் முதலில் நடிக்கக் கொஞ்சம் பயமாக இருந்தாலும், போகப் போக எளிதாக மாறியது. படத்தில் ஒரு தமிழ்ப் பெண்ணாக நடித்திருப்பது எனக்கு மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது. தாயம் விளையாட்டில் தொடர்ந்து 'தாயம்' விழுந்து முன்னேறுவது போல, இந்தப் படம் எனது திரைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





