

கிராமங்களில் பல்வேறு தொழில் செய்பவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் சுய தேவைக்கு மற்றும் வேண்டும் பொருள்களை அங்கேயே செய்து கொண்டனர். அவ்வாறு பல தொழில்கள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்களின் தேவைக்கு ஏற்ப மட்பாண்டங்களைச் செய்து அளித்த குயவர் பெருங்குடி மக்கள் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விளங்குகின்றனர்.
தொழில்களில் தொன்மைச் சிறப்பு வாய்ந்தது மட்பாண்டத் தொழில். மனிதன் ஓர் இடத்தில் நிலையாகத் தங்கி உணவு உற்பத்தி செய்யத் தொடங்கியது புதிய கற்காலத்தில் (சங்ஜ் நற்ர்ய்ங் அஞ்ங்). அவனுக்கு அப்பொழுது உணவையும், நீரையும் சேகரித்து வைத்துக்கொள்ள மண்பானை போன்ற ஒரு பாத்திரம் தேவைப்பட்டது. களிமண்ணைப் பிசைந்து உருட்டி கைகளால் மண்பானை செய்து, வெயிலில் காயவைத்து பயன்படுத்தினான். இவ்வாறு கைகளால் செய்த பானைகள் (ஏஹய்க் ஙஹக்ங் டர்ற்ள்) பழுப்பு நிறமுடைய - சொரசொரப்பான பானைகள் புதிய கற்கால இடங்களில் - அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.
இதற்குப் பின்னர் வருகிற இரும்பு உலோகக் காலமான பெருங்கற்காலம் (ஙங்ஞ்ஹண்ற்ட்ண்ஸ்ரீ அஞ்ங்) மனிதன் நாகரிகத்தில் ஏற்பட்ட பல முன்னேற்றங்களை எடுத்துக் காட்டுகிறது. தங்குவதற்கு வீடுகள், இரும்புப் பொருள்கள், வண்ணக் கல் மணிகள், சக்கரத்தில் வைத்து வனையப்பட்ட பானைகள் போன்றவை அக்கால நாகரிகத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டுகிறது. பானைகளில் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. சூளையில் வைப்பதால் பானையின் உட்பகுதி கறுப்பாகவும் வெளிப்பகுதி சிவந்த நிறமாகவும் காணப்படும். இத்தகைய கறுப்பு - சிவப்பு நிற பானை ஓடுகள் தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் காணப்படுகின்றன.
இராமநாதபுரம் அருகே 30.கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள "தேரிருவேலி' என்ற இடத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் சங்ககால பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதில் "கொற்றன்' "நெடுங்கிள்(ளி)' போன்ற பெயர்கள் பண்டைய தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பானை ஓடுகளில் குறியீடுகள் (எதஅஊஊஐபஐ) பண்டைய தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டு - பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. சாதாரண மக்களின் பயன்பாட்டுச் சிறப்பு, பொருளாதார நிலை, கல்வி அறிவு, உணவு உற்பத்தி செய்யும் நிலை போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ளப் பண்டைய பானை ஓடுகள் பெரிதும் உதவுவதால், தொல்லியல் ஆய்வில் இவை முக்கியமான சான்றாகவும் விளங்குகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாகப் பயன்படுத்திய பொருள், மட்பாண்டங்களே ஆகும். அதன் தொடர்ச்சிதான் இன்றும் பொங்கல் பண்டிகையின் போது மண்பானை வைத்து பலர் பொங்கலிடுகின்றனர்.
தமிழகம் அயல் நாடுகளுடன் கொண்டிருந்த வணிகம் மற்றும் கலாசாரத் தொடர்பு குறித்து அறிந்து கொள்ளவும், மண்பானை ஓடுகள் பெரிதும் உதவுகின்றன. அரிட்டைன், ரெளலடட், ஆம்பொராமதுஜாடி போன்ற ரோமானிய பானை ஓடுகள் போன்றவை வெளிநாட்டுத் தொடர்பினை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் கரூர், கொடுமணல், மாங்குடி, மரக்காணம், அழகன்குளம், அரிக்கமேடு, மாமல்லபுரம், காஞ்சிபுரம், கங்கைகொண்ட சோழபுரம், நாகப்பட்டினம், பெரியபட்டினம் முதலிய பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் தொன்மை சிறப்புமிக்க மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
மட்பாண்டங்கள் செய்யும் குயவர் பெருமக்களைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவர்கள், "வேட்கோவர், கலம் செய்கேரி, மண்வினை மாக்கள், மண்மகன்' என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அவர்கள் கிராம மக்களுக்கு வேண்டிய பானைகள், சட்டிகள், விளக்குகள் போன்றவற்றை செய்து அளித்தனர்.
அடுத்த வாரம் நிறைவு பெறும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.