சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தமிழ்ச் செல்வங்கள்: மண் - 5

விண் பொழிவு, நீர் ஆவியாதலால் ஏற்படுவது தானே! நீரில் இருந்து ஆவியாகும், கதிர் வெப்பத்தால்; நிலத்தில் இருந்தும் ஆவியாகும், கதிர் வெப்பத்தால்; நீர் முகந்த முகில் மழையாகப் பொழிகிறது.

News image
Updated On :22 பிப்ரவரி 2014, 9:05 pm

விண் பொழிவு, நீர் ஆவியாதலால் ஏற்படுவது தானே! நீரில் இருந்து ஆவியாகும், கதிர் வெப்பத்தால்; நிலத்தில் இருந்தும் ஆவியாகும், கதிர் வெப்பத்தால்; நீர் முகந்த முகில் மழையாகப் பொழிகிறது. முகந்த ஆவி முகிலும் காளமுகிலும் ஆயிற்று. அம் மழைக்குறி கண்டே, "நனையக் கூடாது' என ஒதுங்குகிறோமே! அல்லது விழிப்போடு குடை கொண்டு போகிறோமே!

சில துளி போட்டால் தலையில் துணியைப் போடுகிறோம். மழை ஓயும்வரை ஒதுங்கிடம் பார்த்து நிற்கிறோம். ஆனால், அருவியில் நீராடத் தேடிப் போகிறோமே! முட்டி மோதி விழும் அருவிக் குளிப்பில்தான், எத்தனை களிப்பு! மழையும் நீர்தானே! அருவியும் நீர்தானே! ஏன் இந்த வேறுபாடு? அது மண் செய்து வரும் மாயாத மாயைவித்தை! ஆம்! மண்ணில் இருந்து "உருவிக்'கொண்டு "அருவி'யாக வருகிறது. ஆர்வத்தோடு ஆட - அடி அடி என அடிக்க - அளவிடா மகிழ்வோடு ஆடிக்கொண்டும் ஆட வைக்கிறது! நடுங்கிக்கொண்டும் நனைய வைக்கிறது.

கடலுக்குப் போகிறோம்; கடலாடல் விருப்பமும் விடலானாததாகக் கடற்கரையின் பகுதியில் அலையும் தலையுமாய்க் காண்கிறோம். நரைத்தலையா, கருந்தலையா, கடல் நீர் ஆடக் கையால் அழைக்கிறது! ஆடி முடித்து ஆடை புனைந்து வந்து விட்டோமோ? சிறிய ஊற்றை அல்லது "தீர்த்தத்தை' நாடுகிறோமே! அவற்றில் வரும் சிற்றூறல் மண்ணு நீராகிறதே! மண்ணு நீர் மட்டுமா? உண்ணு நீரும் ஆகிறதே! மண்ணில் இருந்து வந்ததுதானே மண்ணுநீர்! கடல்நீர்,

""மண்ணீரும் ஆகாது; அதனருகே சிற்றூறல்

உண்ணீரும் ஆகி விடும்''

எனப்பட்டதே. மண்ணீர் என்பது என்ன? மண்ணில் இருந்து வந்த நீர் மண்ணீர்! மண்ணுநீர்! மண்ணுநீர்ச் சிறப்பென்ன?

பிறந்த குழந்தைக்கு - பிறந்த நாள் விழாவுக்கு சிறந்த நாளாம் மணவிழா, முடிசூட்டு விழா, ஞான முழுக்கு நாள், மணிவிழா முதலிய நாள்களுக்கு மண்ணுநீர்தானே நீராட்டு நீராகியது! மகப்பேறு பார்த்தவர் குழந்தையை மண்ணிலே நீராட்டியே தாயும் பிறரும் மகிழக் காட்டுகிறார்.

உச்சிக்குடத்தராய் - மண்ணுநீர்க் குடத்தராய் மங்கல மகளிர் நால்வர் கூடி மணமக்களை நீராடச் செய்து, புனைகோலம் செய்து, புத்துடை உடுத்து மணமேடையில் அமர்த்தி மணம் செய்வித்து வாழ்த்தினர் (அகம்:86, 136).

முடிசூட்டு விழா, மணிவிழா முதலாம் விழாக்கள் எல்லாம் மண்ணலால் (நீராடலால்) தானே தொடங்கின! உயிர் ஒடுக்கப் போதும் மண்ணித்தானே உடலை எடுத்தனர். "மண்ணு மங்கலம்' என்பது அரச விழாக்களுள் தலைப்பட்டது அல்லவா!

மண்ணச் செய்து நடத்தும் விழாத்தானே "மணவிழா', "மணிவிழா' முதலாம் விழாக்கள்.

பலவகை வண்ணக் கல்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, பட்டை தீட்டி, மண்ணியதால் - மண் - மணியாயது! மணிவகை ஒன்றா இரண்டா? ஒன்பது என ஒரு காலத்து எண்ணினர். "ஒன்பான் மணிமாலை' என இலக்கியமும் கிளர்ந்தது. மண்ணியமையால்தானே மணிப்பெயர் பூண்டது; மணிவிழா ஆயது.

இப்பொழுது, இயற்கை மணிகள் மட்டுமா? செயற்கை மணிகள்தாம் எத்தனை எத்தனை?

தொடர்வோம்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.