முருகப் பெருமான், நக்கீரருக்கு "திருமுருகாற்றுப்படை' என்னும் நூலைப் பாட "உலகம் உவப்ப' என்று அடியெடுத்துக் கொடுத்ததாக வரலாறு உண்டு. இச்செய்தியை அருணகிரிநாதர் தாம் இயற்றிய திருப்புகழில் ""அடிமோனை சொற்கிணங்க உலகமுவப்ப என்று அருளால் அளிக்கும் கந்த பெரியோனே!'' என்று கூறியிருப்பதால் அறியலாம்.
"உலகம் உவப்ப' என்னும் சொற்றொடரில் உள்ள "உ' என்னும் மோனையை "அடிமோனை' என்று கூறியது சரியா என்னும் வினா எழுகிறது. அடுத்தடுத்து வரும் இரண்டு சீர்களின் முதல் எழுத்துகள் ஒன்றி வருவதை இணைமோனை என்றுதான் தொல்காப்பிய உரையாசிரியர்களும் யாப்பருங்கலக்காரிகை ஆசிரியரும் குறிப்பிட்டுள்ளனர்.
தவிர, தொல்காப்பிய செய்யுளியலில் எங்கும் இணைமோனை பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இரண்டு அடிகளின் முதல் எழுத்து ஒன்றி வருவதுதான் அடிமோனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க, அருணகிரிநாதர் தொடர்ந்து வரும் இரண்டு சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவதை அடிமோனை என்று குறிப்பிட்டது ஏன்?
"அடி' என்னும் சொல் "நெருங்கிய' என்னும் பொருளை உடையது. வாய்க்காலின் மிக அருகில் உள்ள வயலை "அடிமடை' என்றும், தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளை "அடிக்கடி' என்றும், மலையை ஒட்டி உள்ள சாரல் பகுதியை "அடிவாரம்' என்றும் குறிப்பிடும் சொல்லாட்சிகளே இதற்குச் சான்று.
எப்போதும் உடன் இருந்து குற்றேவல் பணி புரியும் பெண் "அடித்தொழிலாட்டி' (சிலப்.கொ.கள.காதை -12) எனவும், எப்போதும் உடன் இருக்கும் தோழி "அடித்தோழி' (சிலப்-வா.காதை-3) எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் அடுத்தடுத்து வரும் இரண்டு சீர்களில் அமைந்துள்ள மோனையை "அடிமோனை' என்று கூறுவது முற்றிலும் சரியானது என்பது புலனாகிறது.
பக்தி இலக்கியத்தில் இலக்கணம் பற்றிய ஒரு கருத்தைப் பதிவு செய்த அருணகிரிநாதரின் இலக்கணப் பயிற்சியும் பரந்த அறிவாற்றலும் கற்போரை வியக்க வைக்கின்றன!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


