தமிழரின் வானியல் சிந்தனை!
சங்க காலத் தமிழர் விண்ணின் கோள்களையும் காற்று மண்டலத்தையும் அவற்றின் இயக்கங்களையும், கால அளவுகளையும் அளவிட்டறியும் வானியல் அறிவியலை அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு நம் தமிழ் இலக்கியங்களே சான்றாகும். விண்ணைக் கடந்து, அண்டங்கள் நுழைந்து, அறிவாராய்ச்சி வரலாற்றை(Epistemology) ஆவணப்படுத்தி வைத்தனர்.







