தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

தீர்த்தம்

பொதுவாக நமது கோயில்களில் வில்வம், துளசி கலந்த நீரைத் "தீர்த்தம்' என்று கூறுவர். வில்வமும், துளசியும் பல்வேறு நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் படைத்தவை என்று மருத்துவ உலகம் கூறுகிறது. ஆனால், திருமூலர் மனிதனின் உடலிலேயே "தீர்த்தம்' உள்ளதாகக் கூறுவது வியப்பை ஏற்படுத்துகிறதல்லவா!

Updated On :

பொதுவாக நமது கோயில்களில் வில்வம், துளசி கலந்த நீரைத் "தீர்த்தம்' என்று கூறுவர். வில்வமும், துளசியும் பல்வேறு நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் படைத்தவை என்று மருத்துவ உலகம் கூறுகிறது. ஆனால், திருமூலர் மனிதனின் உடலிலேயே "தீர்த்தம்' உள்ளதாகக் கூறுவது வியப்பை ஏற்படுத்துகிறதல்லவா!

நமது உடல் ஒரு தொழிற்சாலை என்றால் சட்டென்று நம்பிவிடத் தோன்றாது. நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தின் பின்னணியிலும் வேதி வினைகள் இருக்கின்றன என்று சொன்னாலும், "அது எப்படி?' என்ற கேள்விதான் எழும். சரி இருக்கட்டும். "நமது உடலில் உள்ள வேதிப்பொருள்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?'

என்று கேட்டால் நமக்குத் தெரியாது. ஆனால், நமது முன்னோர் இதனை அறிந்து வைத்திருக்கின்றனர் என்பதை தமிழ் இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகிறது.

நம்முடைய உடல் ஒவ்வொரு கணமும் புதுப்புது வேதிச் சேர்மங்களை உருவாக்குகிறது, அழிக்கிறது. இது இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அதன் காரணமாக நமது உடலில் உள்ள வேதிப்பொருள்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாததாகவும் மிகவும் சிக்கலானதாகவும் இருக்கிறது.

இப்படிக் கணக்கிட முடியாத வேதிப்பொருள்கள் உடலில் உருவாவது எப்படிச் சாத்தியமாகிறது? நமது உடலில் உள்ள டி.என்.ஏ. மூலக்கூறுகளில் நடக்கும் திடீர் மாற்றம் (மியூட்டேஷன்) என்பது ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லில் வேறுபட்டு இருப்பதால்தான் கணக்கிட முடியாத வேதிப்பொருள்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன என்பது மருத்துவ ஆய்வு. அது எப்படி உருவாகிறது என்பதைக் கவனிப்போம்.

தொடர்வண்டி (ரயில்) செல்வதற்கு இரண்டு தண்டவாளம் தேவை. அதுபோல் உயிர், துன்பம் இல்லாமல் பயணிப்பதற்கு ""அறம் செய விரும்பு'', ""ஆறுவது சினம்'' என்ற இரண்டு மந்திரங்களை ஒளவையார் கூறியுள்ளார். இவ்விரண்டு மந்திரங்களில் எவ்வளவு அறிவியல் உண்மை இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

மனிதர்கள் தங்களுக்கு வரும் துன்பத்தைத் துடைக்க அவர்களது உடலிலேயே தீர்த்தம் இருக்கிறது என்கிறார் திருமூலர். ""உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்'' என்பது அவர் வாக்கு. மனிதர்களின் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கான கிருமிகள் அவரவர் உடலில் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. அப்படி வளரும் கிருமிகளை நமது உடலில் உள்ள நாளநீர் அவ்வப்போது சுரந்து, அழித்துக்கொண்டே இருக்கிறது. அதனால், நோய்க் கிருமிகள் வளராமல் இருப்பதால் மனிதர்களை நோய் உடனே தாக்குவதில்லை. நாளநீர் சுரப்பது நின்றுவிட்டால், நோய்க் கிருமிகள் தொடர்ந்து வளர்ந்து பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாக அமைந்துவிடுகின்றன. அது எப்படி நடக்கிறது என்பதை ஒரு சான்றின் மூலம் தெரிந்து கொள்வது நல்லது.

நாகரிக உலகில் மருத்துவர்கள் அறிவியல் அடிப்படையில் மனிதர்களின் உடலில் உள்ள சுரப்பிகளை நாளமுள்ள சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் என்று இரு வகையாகப் பிரித்துள்ளனர். இந்தச் சுரப்பிகள் எப்போது சுரக்கிறது என்றால், அது மனிதர்களின் மனநிலை மற்றும் செயல்பாடுகளைப் பொருத்து சுரக்கிறது என்கிறார்கள்.

மனிதர்கள் தங்களுக்கு வரும் நோய்களை யோ(கா)கக் கலையின் மூலம் சரிப்படுத்தலாம் என்று கூறினாலும் இறுதியாக மருத்துவர்கள் மனத்தையும் குணப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். இங்குதான் திருமூலர், ஒளவையார், திருநாவுக்கரசர் ஆகியோரின் சிந்தனைகள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன.

""அறம் செய்ய விரும்பு'', ""ஆறுவது சினம்'' என்பது ஒளவையின் வாக்கு. குழந்தைகள் சிறு வயதிலிருந்தே மேற்கண்ட இரண்டு குணங்களுக்கும் உட்பட்டவர்களாக வளர்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு எதிர்காலத்தில் நோய், வறுமை வராது என்பது தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறிவாக உள்ளது. எப்படி? மனிதர்களின் உடலில் உள்ள சுரப்பிகள் அவர்களது மனநிலைக்குத்தக்கவாறே (சுகமோ-துக்கமோ) சுரக்கின்றன. ஒருவர், இல்லாதவர்களை நினைத்து அவருக்காக மனம் வருந்தும்போது, அவரது உடலில் உள்ள நாளங்களின் வழியாக சுரப்பிகள் நீரை வெளிப்படுத்துகிறது. அந்த நாளநீர் வெளியில் வந்து அவரது உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கிறது.

"ஆறுவது சினம்' - அதிகமாகக் கோபப்படுபவர்களுக்கு இரக்ககுணம் இருக்காது. மனிதர்களின் மனம் இரக்கப்படாமல் கோபமாக மாறும்போது சுரப்பிகள் அடைக்கப்பட்டு நோய்க் கிருமிகளை அழிப்பதற்கான நீர் சுரக்காமல் நின்றுவிடுகிறது. அப்பொழுது மனிதர்களின் உடலில் உள்ள நோய்க்கான கிருமிகள் வளர்ந்து, அது சர்க்கரை நோய், புற்று நோய், கல்லடைப்பு, மன அழுத்தம் முதலிய பல்வேறு நோய்கள் அவரவர் எண்ணத்தின் அளவுக்குத் தக்கவாறு ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

""இரப்பவர்க்கு ஈய வைத்தார்

ஈபவர்க்கு அருளும் வைத்தார்

கரப்பவர் தங்கட் கெல்லாம் கடும்

நரகங்கள் வைத்தார்''

என்பது திருநாவுக்கரசர் தேவாரம். யாரொருவர் தமக்குக் கிடைத்த கல்வியையும் செல்வத்தையும்

இல்லாதவர்களுக்கு இரக்கப்பட்டுக் கொடுத்து உதவவில்லையோ அவர்களுக்கே நோய், வறுமை போன்ற துன்பங்கள் வருகின்றன. இதைத்தான் திருமூலர்,

""உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினைகெட

பள்ளமும் மேடும் பரந்து திரிவரே

கள்ள மனமுடையக் கல்வி இலாரே''

என்றார். எனவே, கோயிலில் கொடுக்கும் புனித நீரான தீர்த்தமும், குளங்களில், ஆறுகளில், கடலில் நீராடுவதும், தீர்த்தம் என்றாலும், மனிதனின் உடலில் உற்பத்தியாகும் "நாளநீரே' உண்மையான தீர்த்தமாகத் திகழ்கிறது.

- குச்சனூர்கிழார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.