தமிழ்த் தாத்தா' டாக்டர் உ.வே. சாமிநாதையரின் தமிழ் நூல் பதிப்புகளில் தலைசிறந்த தம் உரைக் குறிப்புகளைத் தொகை நூற்பதிப்புகளில் வெளியிட்டுள்ளார். அவற்றுள்ளும் தலைசிறந்த உரைக்குறிப்புகளை "சீவக சிந்தாமணி'யில் பதிவு செய்துள்ளார். சீவக சிந்தாமணிப் பதிப்பில் உ.வே.சா., நச்சினார்க்கினியரின் உரையில், விளங்காத பல இடங்களில் அடிக்குறிப்பிட்டு உரைவிளக்கம் செய்திருக்கும் உழைப்பிற்கு, தமிழ் உலகம் அவருக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்?
உரைக்குறிப்பில் ஒன்று:
சீவகன் தந்தை சச்சந்தனும், அவன் மனைவி விசயையும், ஒன்றி இருந்து இன்பம் துய்த்ததற்கு, உடலால் இருவராக இருப்பினும், சிவபெருமானும் உமாதேவியாரும் ஒன்றி ஓருடம்பாக விளங்கியதுபோல இருந்தது என்று சிந்தாமணிப் பாடல் வரி கூறும்.
"முக்கண் சினந்திகழ் விடையினானும்
செல்வியும் சேர்ந்தது ஒத்தே'
என்ற வரிகளுக்கு, "விடையினானும் செல்வியும் சேர்ந்ததொத்து விள்ளாராய் ஓருடம்பாயினார் என்க' என்பது நச்சினார்க்கினியர் உரை. இதற்கு உ.வே.சா., விடையினான் - சிவபெருமான் என்றும், செல்வி - உமாதேவியார் என்றும் உரைக்குறிப்பு வழங்கி, மேலும் பாதிமாதுடன் இருந்ததற்குக் காரணமும் ஜைன நூல் கொண்டு விளக்கம் தருவார்.
சிந்தாமணி வரிகள்:
சச்சந்தன் பெண்வழிச்சேறலைப் "பழி' என்று கூறவந்த திருத்தக்கதேவர், அமைச்சர் கூற்றாகக் கூறவந்த செய்தியைக் கீழ்க்கண்ட பாடலிற் கூறுவார்.
"கணமலை யரையன் மங்கை கோதை
பாகங் கொண்டதே மறுவ தாகக்
கொன்றை மாலைக் கண்ணியாற்குப்
பெரும்பழி யாயிற் றன்றே'
என்ற பாடலில் நச்சினார்க்கினியர் தரும் உரை விளங்காமல் உள்ளது. "இமவான் மகளைப் பாகத்தே வைத்ததே அரனுக்குப் பழியாயிற்றல்லவோ?' என்ற உரைக்குறிப்பிற்கு உ.வே.சா., தரும் உரைக்குறிப்பால்தான் பழி இன்னதென்று விளங்கும்.
சைவ நூல் தராத செய்தி
பாதி மாதுடனாகிய பரமனின் காரணத்தை "தர்மபரீட்சை' என்னும் நூலில் ஜைனர் பின்வருமாறு கூறுவதாக உ.வே.சா., தரும் குறிப்பு அவரது உழைப்பிற்குச் சான்று: ""கங்காதேவியை மணந்தது தெரிந்து ஊடிய உமாதேவியை மகிழ்வித்தற் பொருட்டுச் சிவபெருமான் தமது திருமேனியிற் பாதியைக் கொடுத்தருளினார் என்று தர்மபரீட்ûக்ஷ தெரிவிக்கின்றது'' - என்று உ.வே.சா., தரும் அடிக்குறிப்பு விளக்கம் மூலமாக ஜைனர், சிவபெருமான் பாதிமாதுடன் இருப்பதற்குக் காரணம் கற்பிப்பதை இவரது எழுத்து மூலமாக அறிந்து கொள்ளலாம்.
அப்பர் வாக்கில் சிவபெருமான் கங்கையைத் தலையிற் கொண்டதை அறிந்தால் "திருவூடல்' கொள்ளுவார் உமையம்மை என்ற பொருளில் இரண்டு பாடல்கள் உள்ளன. ஊடல் கொள்ளும் எட்டாந் திருவிழாவில் இப்பாடல்களை ஓதி அம்மையப்பரின் ஊடலைத் தீர்த்து வைப்பதான விழா, மதுரை முதலிய பெருங் கோயில்களில் நடந்து வருகின்றன. அப்பாடல்களில் ஜைனர்கள் கூறுவதுபோல் "பழி' தென்படவில்லை. "ஊடுதல் காமத்திற்கு இன்பம்' என்ற குறள் "உப்பு அமைந்தற்றால்' "ஊடல்' என்று ஊடலுக்கு வள்ளுவர் கூறும் இலக்கணமாகும். அவ்விரண்டு பாடல்களும் உடனாகச் சிந்திக்கத்தக்கன; இவை அப்பர் அருளிய பாடல்கள்:
""ஒருத்தி தன்தலைச் சென்றாளைக்
கரந்திட்டான் உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லனாகி மறுப்படுத்து
ஒளித்து மீண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்
உணர்வினால் ஐயமுண்ணி
ஒருத்திக்கு நல்ல னல்லன்
ஒற்றி யூருடைய கோவே''
""வங்க மலி கடல் நாகைக்
காரோணத்து எம் வானவனே
எங்கள் பெருமானொர் விண்ணப்பம்
உண்டது கேட்டருளீர்!
கங்கை சடையுட் கரந்தாய்
அக்கள்ளத்தை மெள்ளவுமை
நங்கை அறியிவ் பொல்லாது கண்டாய்
எங்கள் நாயகனே.''
இவ்விரு திருமுறைப் பாடல்கள் மூலமாக இல்வாழ்வு நுட்பம் அறியாத, ஜைனர்களின் சிவபெருமான் பற்றிய செய்தியில் பழிபோடுவதை உ.வே.சா., குறிப்பாக அடிக்குறிப்பில் மறுக்காமல் நடுநிலையோடு வரைந்திருப்பதைப் படித்து மகிழலாம். ஜைனர்கள், பாதிமாதிற்குப் பழி கற்பிக்கும் சிவபெருமானின் செயல் சிவபுராணத்து யாண்டும் இல்லை. அவர்களது நூலான தர்மபரீட்சையில் கற்பித்து, எழுதிய செய்தியை முயன்று உ.வே.சா. தம் சிந்தாமணி அடிக்குறிப்பில் எழுதியிருப்பது அவரது நடுநிலையுடன் கூடிய சமயப் பொறையை வெளிப்படுத்துகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துஷார் தேஷ்பாண்டே சம்பவம்: குஜராத்தை பழிவாங்கி வெறித்தனமாகக் கொண்டாடிய ராஜஸ்தான்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து
சங்கிகளைப்போல வாட்ஸ்ஆப் வதந்திகளை வாந்தியெடுக்கும் பழனிசாமி: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


