சங்க காலத்தில் மணமகனைத் தேடியதாகப் பதிவுகள் ஏதுமில்லை. பெரும்பாலும் அவை காதல் மணமே. அங்கு வசதியுள்ளவனா, ஏழையா என்பதெல்லாம் ஏதும் பதிவாகவில்லை. தலைவியைக் கண்டு காதலுறும் தலைவனை மனம் ஒத்து மணந்ததாகத்தான் பதிவுகள் உண்டு.
11-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டப் பதிவு (ராமாயணம்) சற்று முரண்படுகிறது. பெண்ணைப் பெற்ற தந்தை, தாயாரின் எதிர்பார்ப்பு வேறு; பெண்ணின் எதிர்பார்ப்பு வேறாய் உள்ளது எனப் பாடல் (243) தெரிவிக்கின்றது. (இராவணன் பிறப்புப் படலம்).
"குலம் வேண்டும் என்றிருப்பர் குளத்துள்ளார்
கல்வியினால் குறையா ஞானப்
பலம் வேண்டும் என்றிருப்பர் தந்தைமார்
பரந்த பெருஞ்செல்வம் உள்ள
தலம் வேண்டும் என்றிருப்பர் தாய்மார்கள்
யௌவனமும் அழகுஞ் சார்ந்த
நலம் வேண்டும் என்றிருப்பர் நாறுகுழல்
கன்னிமார் நலத்தின் மிக்கார்'
ஒரே ஒரு வேறுபாடுதான். மணமகளை அழைத்து வந்து மணமகனைப் பார்க்கும் நிலை. பாராட்ட வேண்டிய ஒன்று. மணமகனைப் பிடித்ததும் கேட்கும் கேள்வி,
"பின்னும் மயன் கூறுவன் நின்பே ரெழிலும்
யௌவனமும் பேச வேண்டா
உன்வழியும் உன்பதியும் உன்பெயரும்
உன் நலமும் உரைத்தி'
என்ற மணமகள் வீட்டாருக்கு, "ஆயிரம் வேதம் கற்றவன்' எனத் தன்னை இராவணன் அறிமுகம் செய்து கொள்கிறான்.
"... .... அயன்மைந்தன் மகன் மைந்தன்
அணி இலங்கா புரியை யாளும்
மன்னவன் பேர் தசக் கிரீவன் மறைகள்
ஓராயிரம் யான் வல்லேன்' என்றனன்!'
(உ.கா.245)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் மருத்துவமனையில் மாணவா் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

மத்திய உள்கட்டமைப்புத் திட்டங்கள்: அரசுக்கு ரூ. 4.92 லட்சம் கோடி கூடுதல் செலவினம்

உ.பி.யில் 7-ஆவது மாடியில் இருந்து விழுந்து முன்னாள் அமைச்சா் உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என உறவினா்கள் புகாா்

இன்றைய ராசி பலன்கள் (29.7.2026) 12 ராசிகளுக்கும்! மேஷ ராசிக்கு!!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



