அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பழமொழி நானூறு

சேற்றுள் வழுவி அகப்பட்டு வருந்தாது காத்து இழுக்கவல்ல எருது அங்கே எழுந்து செல்லாதிருக்கவும்,

News image
Updated On :21 ஜூன் 2020, 9:30 am


வினைமாட்சி இல்லார் சிறப்புறார்
ஆற்ற வினைசெய்தார் நிற்பப் பலவுரைத்து
ஆற்றாதார் வேந்தனை நோவது - சேற்றுள்
வழாமைக் காத்தோம்பி வாங்கும் எருதாங்
கெழாமைச் சாக்கா டெழல். (பாடல்-155)

மிகவும் போர்த்தொழிலைச் செய்து வெற்றியை உண்டாக்கினார் வாளாயிருப்ப, போரிற் சென்று ஒரு வினையும் செய்யாதார் தமக்குச் சிறப்புச் செய்திலனென்று பலவாறுரைத்து அரசனை நொந்து கொள்வது,  சேற்றுள் வழுவி அகப்பட்டு வருந்தாது காத்து இழுக்கவல்ல எருது அங்கே எழுந்து செல்லாதிருக்கவும், அவ்வாற்றலில்லாத சகடம் எழுந்து செல்லுதலை யொக்கும். "சேற்றுள் - வழாமைக் காத்தோம்பி வாங்கும் எருதாங் கெழாமைச் சாக்கா டெழல்' என்பது பழமொழி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.