பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்ஆற்றா(து) அவர் அழுத கண்ணீர் அவைஅவர்க்குக்

News image
Updated On :6 செப்டம்பர் 2020, 3:16 pm

தினமணி

தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
ஆற்றா(து) அவர் அழுத கண்ணீர் அவைஅவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும். (பாடல்-166)


குடிப்பிறப்பால் தீய செயல்களை உடையவர், ஒரு துணையும் இல்லாதவர்,  வறுமையுடையார்,  சொற்களால் பகைவரை ஒத்தார் என்றிங்ஙனம் நினைத்து, குடிப் பிறப்பு, துணை, செல்வம் முதலிய வலிமை உடையார் அவையிலாரை நலிந்த இடத்து,  தாங்க இயலாது அவர்கள் தங்கண்களினின்றும் பரப்பிய கண்ணீராகிய அவையே தம்மை நலிந்த அவர்க்குக் கூற்றாய் விழாநிற்கும். "ஆற்றாது அவர் அழுத கண்ணீர் அவை அவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்துவிடும்'  என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.