தமிழிலிருந்து பல சொற்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளுக்கு இடம்பெயர்ந்து அந்தந்த மொழிச் சொற்களாகிவிட்டன. இதேபோல், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குப் பல சொற்கள் போயிருக்கின்றன (எ. கா: கட்டுமரம்).
கம்பராமாயணத்தில் புதிய சொல் ஒன்று ஆங்கிலத்திற்கு இடம்பெயர்ந்திருப்பது தெரிய வருகிறது. அந்தச் சொல்தான் "கண்டம்'. "கண்டம்' என்றால் ஆசியா கண்டம், ஆஸ்திரேலியா கண்டம், அல்ல. "அவங்கிட்ட அதைக் குடுத்திட்டியா? போச்சு... அவன் அதைக் கண்டம் பண்ணிடுவான்' என்றும், "உன்னை கண்டம் பண்ணிடுவேன்' என்றும் பேச்சு வழக்கில் சிலர் கூறுவதுண்டு.
"கண்டம்' என்ற இச்சொல் ஆங்கிலத்தில் "கண்டம்' (கான்டினென்ட்) என்ற சொல்லுக்குக்கான பொருளே சொல்லப்படுகிறது. இதன் பொருளும் "பயனற்றதாக்கு, சிதைத்துவிடு' என்பதாகும். நம்மில் பலர் "கண்டம்' என்ற சொல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்ததாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இச்சொல் தமிழிலிருந்துதான் ஆங்கிலத்திற்குப் போயிருக்கிறது.
கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலேயே கம்பர் தான் அருளிச் செய்த இராமாயணத்தில், "கண்டம்' என்றசொல்லை, "பயனற்றதாக்கு, சிதைத்துவிடு' என்கிற பொருளில் கையாண்டிருக்கிறார்.
மார்பினும் தோளின்மேலும், வாளிவாய் மடுத்த வாயில்,
சோர்பெருங் குருதி சோரத் துளங்குவான், தேறாமுன்னம்,
தேர்இரண்டு அருகுபூண்ட கழுதையும் அச்சும் சிந்த,
சாரதி புரள, வீரத் தண்டினால் "கண்டம்' செய்தான்.
(யு.கா. படலம்-22: பா.130)
இராவணனின் படைத்தலைவனான அகம்பன் என்பவனுடன் அனுமன் போரிடுகிறான். அகம்பன் ஏவிய அன்புகளினால் அனுமன் மார்பிலும் தோளிலும் குருதி பெருகி ஓடுகிறது. அவன் தளர்ச்சி நீங்கி, தெளிவடையும் முன்னரே தேரில் பூட்டியிருந்த ஆயிரம் கழுதைகளும் அச்சாணியும் முறிந்து விழ, தேர்ப்பாகன் மண்ணிலே புரள, வீரக் கதாயுதத்தால் அடித்து அந்த அசும்பனின் தேரைச் சிதைத்தான்; பயனற்றதாக்கினான். அதாவது "கண்டம்' செய்தான்.
இதுபோன்று தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்ந்த சொற்கள் இன்னும் ஏராளம் புதைந்து, பொதிந்து கிடக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!
வீடியோக்கள்

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை


