தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தேங்கி நின்ற நீரானது வற்றிப்போனதென்றால் அதனைச் சார்ந்து வாழ்ந்தனவெல்லாம் வாழ வகையற்று அழிந்து கெடும்; திரியும், இடிஞ்சிலும், நெய்யும் சார்வாகவே சுடரும் அழகாக எரியும்; அவை இன்றேல் அழிந்துபோம்.

News image
Updated On :12 செப்டம்பர் 2021, 5:06 pm


திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக
எரியும் சுடரேர் அனைத்தாய்த் - தெரியுங்கால்
சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்
நீரற நீர்ச்சார்வு அறும். (பாடல்-219)


தேங்கி நின்ற நீரானது வற்றிப்போனதென்றால் அதனைச் சார்ந்து வாழ்ந்தனவெல்லாம் வாழ வகையற்று அழிந்து கெடும்; திரியும், இடிஞ்சிலும், நெய்யும் சார்வாகவே சுடரும் அழகாக எரியும்; அவை இன்றேல் அழிந்துபோம். அதுபோலவே ஆராயுமிடத்துப் பிறப்புக்குச் சார்வாயுள்ள மற்றையன எல்லாம் அற்றுப்போகவே, அந்த அற்றுப்போன தன்மையானது, விரைந்து அவனுடைய பிறப்பினையும் அறுக்கும் சக்தியாகிவிடும். "நீரற நீர்ச்சார்வு அறும்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.