பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
துடி அடித்துப் பண்களை இசைப்பதுபோல மலைமேலிருந்து பாறைமேல் நயமாக விழுந்து ஒலி எழுப்பும் அருவிகள் நிரம்பிய நல்ல நாட்டிற்குச் சொந்தக்காரனே!


நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் ஆகாதே,
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்;
வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாட!
கற்பறிவு போகா, கடை. (பாடல்: 270)
துடி அடித்துப் பண்களை இசைப்பதுபோல மலைமேலிருந்து பாறைமேல் நயமாக விழுந்து ஒலி எழுப்பும் அருவிகள் நிரம்பிய நல்ல நாட்டிற்குச் சொந்தக்காரனே! அறிவு பெறுவதில் நாட்டம் இல்லாதவர்க்குச் சொற்குறிகொண்டு அறிவை ஊட்ட இயலாது. கற்றல் மட்டுமே ஒருவனுக்குக் கடைவழி வரை அறிவைப் பெற்றுத் தந்துவிடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...