பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

இனிய இயல்புகளையும் அகன்ற அல்குலையும் உடைய பெண்ணே! செல்வம் திரண்டு இருந்த போது அதனைக் காப்பாற்றாமல் அழிய விட்டு விட்டுப் பின்னர் மீண்டும் செல்வம் சேர்க்க முயலுவது மயிலின் தலைமேல் வெண்ணெய்யை

News image
Updated On :24 செப்டம்பர் 2023, 1:14 pm


முன்னை உடையது காவாது, இகழ்ந்து இருந்து,
பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல் - இன் இயற்கைப்
பைத்து அகன்ற அல்குலாய் - அஃதால், அவ்வெண்ணெய்மேல் 
வைத்து, மயில் கொள்ளுமாறு.    (பாடல்: 325)

இனிய இயல்புகளையும் அகன்ற அல்குலையும் உடைய பெண்ணே! செல்வம் திரண்டு இருந்த போது அதனைக் காப்பாற்றாமல் அழிய விட்டு விட்டுப் பின்னர் மீண்டும் செல்வம் சேர்க்க முயலுவது மயிலின் தலைமேல் வெண்ணெய்யை வைத்து அது வெயிலில் உருகி மயிலின் கண்களை மறைத்துவிடும்போது மயிலைப் பிடித்துவிடலாம் என்று நினைப்பதற்கு ஒப்பாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.