'பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே'

நேர்மையான பண்பு அற்றவர்களாகிய கீழோர்கள், பண்பற்ற இழிந்த சொற்களைத் தம்மைக் குறித்துச் சொல்லிய காலத்திலும், அதனைப் பாராட்டாது பொறுத்திருப்பதே அறிவுடையோரின் தகுதியுடைமையாகும்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 4:59 pm IST

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால், மற்றது

தாரித்திருத்தல் தகுதி; மற்று-ஓரும்

புகழ்மையாக் கொள்ளாது, பொங்குநீர் ஞாலம்

சமழ்மையாக் கொண்டு விடும்..

(பாடல் 72 அதிகாரம்: பொறை உடைமை)

நேர்மையான பண்பு அற்றவர்களாகிய கீழோர்கள், பண்பற்ற இழிந்த சொற்களைத் தம்மைக் குறித்துச் சொல்லிய காலத்திலும், அதனைப் பாராட்டாது பொறுத்திருப்பதே அறிவுடையோரின் தகுதியுடைமையாகும். அதற்கு மாறுபட்டதாகிய பொறுமையின்மையை, மிக்க நீர்ப்பெருக்கையுடைய கடலாற் சூழப்பட்ட பூமியிலுள்ள உயர்ந்தவர்கள், புகழுக்குக் காரணமாகக் கொள்ளாது, பழித்தற்குக் காரணமாகவே எண்ணித் தம்மிடத்தினின்றும் நீக்கிவிடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.