சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!மேகேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் மேலிடத்திற்கு முதல்வர் விஜய் அழுத்தம் கொடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்! நவ. 18-ல் தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்! சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகம் ஈடு இணையற்ற பங்களிப்பு: பிரதமர் மோடிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

கம்பரின் போர் அழகியல்

இராமகாதையை பிரம்மாண்டமான படைப்பாக உருவாக்கியிருக்கும் கம்பர், காப்பியக் களங்களின் வேறுபட்ட தருணங்களுக்கும், சூழலுக்கும், மனநிலைக்கும் ஏற்ப முழு நிலவையும் மூன்றாம் பிறையையும் தன் பாடல்களில் கையாளத் தவறவில்லை.

கம்பர் - சித்திரிப்பு

Updated On :

இராமகாதையை பிரம்மாண்டமான படைப்பாக உருவாக்கியிருக்கும் கம்பர், காப்பியக் களங்களின் வேறுபட்ட தருணங்களுக்கும், சூழலுக்கும், மனநிலைக்கும் ஏற்ப முழு நிலவையும் மூன்றாம் பிறையையும் தன் பாடல்களில் கையாளத் தவறவில்லை.

இலங்கை நகருக்குள் சீதையைத் தேடி நள்ளிரவில் அனுமன் அலையும்போது, வெள்ளிக் குடத்தால் பாற்கடலை முகந்தெடுத்து ஊற்றுவது போல, மேலிருக்கும் வானம் நிலவொளியைப் பொழி

கிறது. இந்த அரிய காட்சியை

திங்கள் வெண்குடத்தினால், திரை

முரிந்து உயர்பாற்கடல் முகந்து, மூரிவான்

சொரிந்ததேஆம்என துள்ளி மீனொடும்,

விரிந்தது; வெண்ணிலா மேலும் கீழுமே

என்று சித்திரிக்கிறார் கம்பன்.

இலக்கிய அழகியல் என்பதை எழிலும் இனிமையுமான கணங்களோடு மட்டுமே கம்பர் நிறுத்திக்கொண்டு விடுவதில்லை.

இந்திரசித்து, கும்பகர்ணன் உள்ளிட்ட பல மாவீரர்கள் பலரும் மடிந்தபிறகு இறுதியாகக் களம் காண வருகிறான் இராவணன். அப்போது, அவனுக்குத் துணையாக வந்து சேருகிறது மூலபலசேனை. அதிலுள்ள வீரர்களின் தன்மை பற்றிக் குறிப்பிடும் கம்பர், உண்ண ஊன் கிடைக்காமல் போனால் யானையையே தின்று பசியாற்றிக்கொள்ளத் தயங்காதவர்கள் என்றும், தண்ணீர் கிடைக்காமல் போனால் மேகத்தையே வாரி வாயில் பிழிந்து கொண்டு தாகத்தை ஆற்றிக்கொள்பவர்கள்,

அறத்தைத் தின்று, அருங் கருணையைப்

பருகி, வேறு அமைந்த

மறத்தைப் பூண்டு, வெம் பாவத்தை

மணம்புணர் மணாளா!

என்றும், தொடர்ந்து அந்த அரக்கர்களின் கொடூரத்தை விரித்துக்கொண்டே போகிறார். அப்போது, சட்டென்று அவரது கற்பனைக்குத் தட்டுப்படுகிறது மூன்றாம் பிறை.

இரக்கம் என்பது இம்மியும் அற்ற பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட அந்த அரக்கர்கள், காட்சிக்கு இனியதும், காண்பதற்கு அரியதுமான அழகான பிறை நிலவைக் குரங்கு கைப் பூமாலையாக்கி, முதுகு சொறியும் ஒரு கருவியாக்கி மலினப்படுத்தி விடுகிறார்கள்.

'இந்துவால் யாக்கை சொறிந்து, தீர்வு உறு தினவினர்' என்று அந்தக் காட்சியைச் சித்திரிப்பதன் வழி, தொடக்கத்திலிருந்து விவரித்து வரும் அவர்களது இராக்கத இயல்புக்கு மேலும் வலுசேர்த்து விடுகிறார் கம்பர்.

அதே அரக்கர்கள் மடிந்து கிடக்கும்போதும் தலை காட்டுகிறது பிறை நிலவு. போர்க்களத்தில் அவர்கள் வதைபட்டுக் கிடக்கிறார்கள், யானைகள், கண்டதுண்டமாய்ச் சிதைந்து கிடக்கின்றன. அப்போது பிளந்து கிடக்கும் யானையின் வயிற்றுக்குள் புதையுண்டு கிடக்கும் இராக்கதர்களின் எயிறுகள் மேகத்திற்குள் பொதிந்திருக்கும் நிலாத்துண்டு போலக் காட்சியளிப்பதாய் கற்பனை செய்கிறார் கம்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.