ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

போர் நிறுத்தம்: பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம்; சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

stock market

பங்குச்சந்தை - ANI

Updated On :

ஈரான் உடனான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகள் இன்று (நவ. 11) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மேலும் வெளிநாட்டினர் அதிகம் பங்குகளை வாங்கி வருவதாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாலும் ( 89.16 டாலர்) பங்குச்சந்தை வர்த்தகம் லாபத்துடன் நடைபெற்று வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேலும் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.

சென்செக்ஸ் இன்று காலை 82,248.68 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 1,135.10 (1.40%) புள்ளிகள் உயர்ந்து 82,241.75 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 293.30 (1.17%) புள்ளிகள் உயர்ந்து 25,337.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் இன்டர்குளோப் ஏவியேஷன், மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக இருந்தன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் முறையே 0.68 சதவீதம் மற்றும் 1.32 சதவீதம் உயர்ந்தன.

துறைவாரியாக, நிஃப்டி பொத்துறை வங்கி குறியீடு அதிகபட்சமாக உயர்ந்தது, அதே நேரத்தில் நிஃப்டி பார்மா குறியீடு அதிகபட்சமாக சரிந்தது.

Bulls in action: Sensex zooms 1,300 pts intraday; oil, FII buying aid rally

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER