பங்குச்சந்தை: ரூ. 7 லட்சம் கோடி லாபம்! சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் உயர்வு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

கோப்புப் படம் - IANS
பங்குச்சந்தைகள் கடந்த சில நாள்களாக தொடர்ந்து உயர்வுடன் வர்த்தகமாகி வரும் நிலையில் இன்றும் (நவ. 5) உயர்ந்து முடிந்தன.
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று மிகப்பெரும் லாபத்துடன் முடிந்துள்ளன. டிரம்ப்பின் தோல்வியால் மேற்காசியப் போர் முடியும் என்ற நம்பிக்கையில் கச்சா எண்ணெய் விலை (95 டாலர்) குறைந்துள்ளதும் பங்குச்சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,910.94 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை முதலே மிகப்பெரிய லாபத்துடன் வர்த்தகமானது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 2,008.61 (2.6%) புள்ளிகள் உயர்ந்து 79,310.01 என்ற புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 576 (2.4%) புள்ளிகள் உயர்ந்து 24,536.60 புள்ளிகளில் முடிந்தது.
நேற்று ரூ. 494.42 லட்சம் கோடியாக இருந்த பிஎஸ்இ நிறுவனங்களின் சந்தை மூலதனம், ரூ. 7.03 லட்சம் கோடி உயர்ந்து ரூ. 501.45 லட்சம் கோடியாக உயர்ந்தது .
நிஃப்டி50 குறியீட்டில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாகும்.
நிஃப்டி மிட்கேப் 100, நிஃப்டி ஸ்மால்கேப் 100 முறையே 1.87 சதவீதம், 0.56 சதவீதம் உயர்ந்தன.
துறைவாரியாக, நிஃப்டி ஆட்டோ, ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், தனியார் வங்கிகள் சிறப்பாகச் செயல்பட்டன, அதேசமயம் நிஃப்டி கெமிக்கல், மீடியா ஆகியவை மோசமாகச் செயல்பட்டன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.46 ஆகத் தொடங்கியுள்ளது.
Summary
Stock Market: Sensex surges 2,009 pts, Nifty ends at 24,537; Rs 7 lakh crore gain
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

