
நண்பனை தூற்ற வேண்டாம்
இரண்டுபேர் தம்முன் வேற்றுமை இல்லாமல் கலந்து நட்புக் கொண்ட காலத்திலே, அவர்களுள் நம்பத்தகாத தீய ஒழுக்கம் ஒருவனிடத்தில் உண்டாகுமானால்...

வேற்றுமை இன்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா வொழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க; பொறானாயின்
தூற்றாதே, தூர விடல்!
(பாடல் 75 அதிகாரம்: பொறை உடைமை)
இரண்டுபேர் தம்முன் வேற்றுமை இல்லாமல் கலந்து நட்புக் கொண்ட காலத்திலே, அவர்களுள் நம்பத்தகாத தீய ஒழுக்கம் ஒருவனிடத்தில் உண்டாகுமானால், மற்றவன் தன்னால் பொறுக்கக்கூடிய அளவுவரைக்கும் பொறுக்கக் கடவன்; அப்படிப் பொறுக்க மாட்டானாயின் அந்த நண்பனைத் தூற்றாமல் அவனுடைய நட்பை மட்டும் தூரமாக ஒதுக்கிவிடக் கடவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





