இன்பத்தை அனுபவிப்பது எவ்வாறு?

 நாம் மலர்களை, மலையை, நதிகளை, கடல் அலைகளை, வானத்தை, நிலவை என இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கண்டு ரசிக்கிறோம். அந்த ரசனையினால் பெறும் ஆனந்தம் எங்கிருந்து வருகிறது? மலர்களிலும் நதிகளிலும் மலைகளிலும் இ
Updated on
1 min read

 நாம் மலர்களை, மலையை, நதிகளை, கடல் அலைகளை, வானத்தை, நிலவை என இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கண்டு ரசிக்கிறோம். அந்த ரசனையினால் பெறும் ஆனந்தம் எங்கிருந்து வருகிறது? மலர்களிலும் நதிகளிலும் மலைகளிலும் இருந்தா? இல்லை என்கிறது "ஆனந்தவல்லீ'. இது தைத்ரீய உபநிஷதத்தில் மூன்றாவது உபநிஷதம்.

 ""ஆனந்தம் நம்முள்ளேயே உள்ளது. ரசிப்பதற்கான மனநிலையில் நாம் இருந்தால் மட்டுமே மலர்களும் மலைகளும் நமக்கு இன்பத்தைத் தர முடியும். இல்லாவிட்டால் அவை நமக்குள் எந்த விதமான இன்பத்தையும் தராதது மட்டுமின்றி, சில நேரங்களில் அவை நமக்கு ஆழ்ந்த துக்கத்தையே எழுப்புவதாக நாம் உணர்கிறோம். எனவே இன்பம் என்பது நம்முள்ளேயே உள்ளது. இதன் பொருள் என்ன? நம்முள் இருப்பது ஆன்மா. அது இறைவனின் அம்சம். இறைவன் ஆனந்த மயமானவர். எனவே ஆன்மாவும் ஆனந்தம் நிறைந்ததாக உள்ளது. அந்த ஆன்மா நம்முள் எங்கே உள்ளது? இதய வெளியில் (யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்) ஆனந்தத்தின் உறைவிடமான ஆன்மா அங்கே இருப்பதால்தான் நாம் இன்பம் பெறமுடிகிறது''.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com