தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

திருத்தலத் திருப்பணி: சுந்தரவதனன் அருளும் வழூர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசிக்கு அருகில் உள்ளது வழூர் அகரம். பிரளய காலத்தில் உலகமெல்லாம் அழிந்தும் இவ்வூர் மட்டும் அழியாமல் வழுவிச் சென்ற காரணத்தால் வழூர் என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:06 pm

எஸ். வெட்கட்ராமன்

திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசிக்கு அருகில் உள்ளது வழூர் அகரம். பிரளய காலத்தில் உலகமெல்லாம் அழிந்தும் இவ்வூர் மட்டும் அழியாமல் வழுவிச் சென்ற காரணத்தால் வழூர் என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். பிரம்மன் தனது சாபத்தைப் போக்க தவம் செய்ததால் பிரம்மபுரி என்றும் அயனீச்சுரம் என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.

 சுந்தரவதனப் பெருமாள்!

 ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரவதனப் பெருமாள் இங்கு அருள்புரிகிறார். திருக்கோயில் மிகவும் பழமையானது. சுந்தரவதனன் என்ற பெயருக்கு ஏற்ப பெருமாளின் ரூபம் மிகவும் அழகு வாய்ந்தது. திருக்குளத்தை ஒளவை குளம் என்று அழைக்கிறார்கள். இக்குளத்தில் நீர் வற்றுவதே இல்லை.

 சேஷாத்ரி அவதரித்தார்!

 இவ்வூரில்தான் மகான் சேஷாத்ரி சுவாமிகள் அவதரித்ததாக வரலாறு சொல்கிறது. சேஷாத்ரி சுவாமிகளின் குடும்பத்தார் வழிபட்ட புனிதமான துளசி மாடம் பெருமாள் கோயிலில் இருக்கிறது. ஒüவை குளத்தில் சேஷாத்ரி சுவாமிகள் ஜெபம் செய்து கொண்டிருந்த தருணத்தில் பகவான் கிருஷ்ணன் அவருக்கு காட்சியளித்ததாக சொல்லப்படுகிறது.

 திருத்தலம் நிறைந்த ஊர்!

 காமரசவல்லி உடனுறை பிரம்ம

 புரீஸ்வரர் எழுந்தருளும் திருக்கோயிலும் வழூரில் இருக்கிறது. இங்குள்ள 20 கல்வெட்டுகளில் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பொன்னியம்மன் ஆலயம், முத்துநாயகி அம்மன் ஆலயம் ஆகியவையும் பழமையைப் பறைசாற்றுகின்றன.

 குழந்தைப் பேறு!

 குழந்தைப் பேறு வேண்டி நான்கு சனிக் கிழமைகளில் சுந்தரவதனப் பெருமாளை தரிசிக்க மழலை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  திருப்பணி!

 காலப்போக்கில் சிதிலமடைந்த சுந்தரவதனப் பெருமாள் ஆலயத்தில் பூஜை, ஆராதனைகள் கூட நடை

 பெறாமல் இருந்தன. இந்நிலையில் "ஸ்ரீசுந்தரவதனப் பெருமாள் கைங்கர்ய சபா' ஏற்படுத்தப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. புதிதாக ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் சிலைகள் செய்யப்பட்டுள்ளன.

 இந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி காலை 9 மணிக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த வைபவத்துடன் மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் அவதரித்த இல்லத்தில் ஒரு மணிமண்டபம் அமைவதற்கான பூமி பூஜையும் நடைபெறுகிறது.

 அமைவிடம்:

 காஞ்சிபுரம் - வந்தவாசி இடையே வந்தவாசியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது வழூர் அகரம் கிராமம்.

 மேலும் தகவலுக்கு: 98401 10827, 98400 53289.

 எஸ். வெங்கட்ராமன்,

 தகவல், பட உதவி: புலவர் வாசுதேவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.