தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

பாரதம் போற்றும் பாஞ்சாலி!

நமது வழிபாடுகளில் மிகப் பழமையானது சக்தி வழிபாடு. அந்த வகையில் கிராமங்களில் முதலில் தோன்றியவை தேவதை கோயில்கள். மாரியம்மன், திரௌபதியம்மன், பொன்னியம்மன் - இன்னும் பல பெயர்களில் அந்த தேவதைகள் அழைக்கப்படுக

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:57 pm

எஸ். வெட்கட்ராமன்

நமது வழிபாடுகளில் மிகப் பழமையானது சக்தி வழிபாடு. அந்த வகையில் கிராமங்களில் முதலில் தோன்றியவை தேவதை கோயில்கள். மாரியம்மன், திரௌபதியம்மன், பொன்னியம்மன் - இன்னும் பல பெயர்களில் அந்த தேவதைகள் அழைக்கப்படுகின்றன. வட தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் திரௌபதியம்மனை வழிபடுகின்றனர். மகாபாரதம் போற்றிய பாஞ்சாலியே, அம்மன் திரௌபதியாக அருள்புரிகிறாள்.

நல்லாமூர் கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் ஆலயத்தில் பாரம்பரிய பழக்க வழக்கங்களிலிருந்து சிறிதும் மாறாமல் வழிபாடு நடைபெறுகிறது. பழமையான கோயில். மூலவர் அம்பாள், பத்மபீடத்தில் நின்ற கோலத்தில் மீனாட்சி அம்மன் போன்றே காட்சி தருகிறாள். அற்புதமான அழகான திருமேனி. பஞ்சலோகத்தில் மகாவிஷ்ணு, திரௌபதி அம்மன், அர்ச்சுணன், சுபத்ரை, பொன்னியம்மன் சிலைகள் அழகாக வார்க்கப்பட்டுள்ளன. மகாமண்டபம், அந்தராலம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் என்று இந்த ஆலயம் சற்று பெரிதாகவே உள்ளது. ஆலயத்திற்கு வெளியே துவஜஸ்தம்பத்தில் போத்ராஜா என்று சொல்லப்படும் மன்னனின் உருவம் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தீ மிதி விழா நடைபெறுகிறது. அம்பாள் மடியில் நெருப்பு கட்டி அவளது உத்தரவுடன் இவ்விழா தொடங்குகிறது. இந்தத் திரௌபதி அம்மனை குல தெய்வமாகக் கொண்டவர்கள் பலர். முடிவு எடுக்க முடியாத பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டி அம்பாளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். சித்ரா பௌர்ணமியன்று 1008 தாமரை மலர்களால் மாலை கட்டி திரௌபதிக்கு அணிவிக்கப்படுகிறது.

தற்போது இந்த ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிதாக கன்னி மூல கணபதி சந்நிதியும் கட்டப்பட்டுள்ளது. வருகிற ஜூலை 8ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கிராமத்தின் காவல் தெய்வமாய் விளங்கும் திரௌபதியம்மனை வழிபட்டு திகட்டாத பேரின்பம் பெறலாம்.

மேலும் தகவலுக்கு: 97518 32525/94439 89987.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.