மகாமேருவாக திரிபுர சுந்தரி!
தாம்பரம் - காஞ்சிபுரம் வழித் தடத்தில் படப்பை, ஒரகடம் கூட்டுரோடு அருகே, பண்ருட்டி கண்டிகை கிராமத்தில்


தாம்பரம் - காஞ்சிபுரம் வழித் தடத்தில் படப்பை, ஒரகடம் கூட்டுரோடு அருகே, பண்ருட்டி கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமகாமேரு தியான நிலையம். 1993ஆம் வருடம் ஸ்ரீவித்யா உபாசகர் சுவாமிஜி முருக பூஷணம் என்பவரால் நிறுவப்பட்டது இந்த தியான நிலையம். இங்கே ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரி அன்னை ஸ்ரீமகாமேருவாகவும், உபாங்க தேவிகளான 16 நித்யாக்களும், வாராஹி, ராஜமாதங்கி மாதாக்களும் யந்திர ரூபத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடந்து வருகின்றன. தனியாக ஒரு தியான மண்டபமும் இங்கே உள்ளது. பௌர்ணமி நாட்களும், நவராத்திரியும் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்தருணங்களில் அன்னதான கைங்கர்யமும் நடைபெற்று வருகிறது. உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தந்து வழிபாடு செய்து அம்பிகையின் அருளைப் பெறுகிறார்கள்.
தற்போது இந்த தியான நிலையத்தில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. அக்டோபர் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் தினசரி சிறப்பு ஹோமங்கள், ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் ஸ்ரீமகாமேரு அன்னைக்கு 1108 தாமரை பூக்கள், வில்வ இலைகளுடன் அர்ச்சனை, அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் இன்னிசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன. மேலும் சிறிய அளவில் திருப்பணியும் இந்த தியான மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 94443 36134.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...