சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைவனின் திருத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதுதான் ஹஜ் பயணத்தின் மிக முக்கிய
நோக்கம்.
இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதர்களும் தன்னைப் படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு இணையாக யாரையும் ஆக்கக் கூடாது.
படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும், படைப்பினங்களை வணங்கக் கூடாது என்ற ஓரிறைக் கொள்கைக்காக தனது குடும்பத்தையே தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் (அலை) அவர்கள் காட்டித் தந்த பயணம்தான் இந்த ஹஜ்
பயணம்.
யாருக்கு பொருளாதாரம், உடல் ஆரோக்யம், வாகன வசதி, செல்லும் பாதையில் பாதுகாப்பு, தான் சென்று திரும்பி வரும்வரை தனது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்ற வசதிகள் இருக்கிறதோ அவரின் மீது ஹஜ் கடமையாகும். இந்த வசதிகள் அனைத்தையும் பெற்ற ஒருவர் ஹஜ் செல்லாமல் இருந்தால் அவர் அல்லாஹ்விடம் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எவர் ஹஜ் செய்ய நாடுகின்றாரோ அவர் தாமதம் செய்யாமல் உடனே அதை நிறைவேற்ற வேண்டும். பின்னால் நிறைவேற்றலாம் என்று தள்ளிப்போடக் கூடாது. நிலைமை இப்படி இருக்க இன்றைய செல்வந்தர்களில் எத்தனையோ பேர் தமது வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவித்துவிட்டு கடைசியாக ஹஜ் பயணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இப்படி நினைப்பதே ஒரு பாவச் செயல் என்பதை மறந்து விடுகிறார்கள்.
அன்றைய காலகட்டத்தில் ஹஜ் பயணம் மிகவும் சிரமமான சூழ்நிலையில் ஒட்டகத்திலும், குதிரையிலும், கழுதைகளிலும் நிறைவேற்றினர் என்பது வரலாறு. ஆனால், இன்றைய சூழ்நிலையில் மிகவும் எளிதான முறையில் நிறைவேற்றும் பாக்யத்தை இறைவன் நமக்கு தந்து இருக்கிறான்.
வசதி படைத்த சிலருக்கு மட்டுமே கிடைக்கும் இந்தப் பாக்கியத்தை அடையும் ஹாஜிகள், இந்தப் பயணத்தின் மூலம், எல்லா நிலைகளிலும் இறைவனின் மீது பயம், வாழ்க்கையில் தூய சிந்தனை, நேர்மை, நியாயம், எந்தச் சூழ்நிலை வந்தாலும் பாவமான செயல்களை விட்டு தன்னை பாதுகாக்கும் மனப்பான்மை, இறைபக்தி, ஏழைகளின் மீது இரக்கம் போன்ற அனைத்தையும் பெற்றுக்கொண்டவராக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் இந்த ஹஜ் பயணத்தின் மூலம் அவருக்கு எந்த நன்மையும் கிடைக்காதது ஆகிவிடும். அல்லாஹ், குர்ஆனில், ஹாஜிகளை பார்த்து ""நீங்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றி முடித்ததும் நீங்கள் உங்கள் பெற்றோர்களை
நினைவு கூர்ந்து சிறப்பித்ததை போல் அல்லாது அதைவிட அதிகமாக அழுத்தமாக அல்லாவை நினைவுகூர்ந்து திக்ரு செய்யுங்கள் (அல்குர்ஆன் 2:200)'' என்று கூறுகின்றார். இவ்வளவு சிறப்புமிக்க புனித ஹஜ் பயணம் செய்யும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள்புரிவானாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









