சார்யாள் உபநிஷத்திடம் அதிக சுதந்திரம் எடுத்துக் கொண்டு, இல்லாததை எல்லாம் சொன்னதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. ஆசார்யன் மூலமாகத்தான் ஞானம் என்பதே உபநிஷத் மதம். பல இடங்களில் அப்படி இருக்கிறது.
கண்காணாக் காட்டிலே கண்ணைக் கட்டிக் கொண்டு விடப்பட்டவனுக்கு எப்படி ஏற்கெனவே வழி கண்டவர்களே வழி சொல்லித் தந்து காப்பாற்ற முடியுமோ, அப்படி அஞ்ஞான ஜீவிக்கு ஞானியான குருதான் ஞான ஸித்திக்கு வழி சொல்லித் தர முடியும் என்று சாந்தோக்ய உபநிஷத்தில் இருக்கிறது. அந்த இடத்தில்தான், ஆசார்யன் ஆன மனிதனுக்கே ஞானம் உண்டாகும் - "ஆசார்யவான் புருஷோ வேத' என்று வருகிறது.
"குரும் ஏவ அபிகச்சேத்' - குருவையே தேடிக் கொண்டு போய் அடைய வேண்டும் என்று முண்டக உபநிஷத் சொல்கிறது. வஸ்துகளை அலசி ஆராய்ந்து பார்த்தவனை ஐதரேய உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது என்றால் இங்கே உலகங்களை சோதித்துப் பார்த்தவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. இரண்டும் ஒன்றுதான். அப்புறம் அவனுக்குத் தானாக ஞானம் வந்த மாதிரி விஷயம் தெரியாதவர்களுக்குத் தோன்றும்படி ஐதரேய மந்திரங்கள் போகின்றன.
ஆனால் இங்கேயோ, உலகங்களை சோதித்துப் பார்ப்பவன், இவையெல்லாம் கர்ம சம்பந்தப்பட்டவையே. ஆத்வ தத்வமோ கர்மம் இல்லாதது. அதைக் கர்ம சம்பந்தம் உள்ளவற்றால் அடைய முடியாது என்று புரிந்து கொண்டு உலகத்திடம் வைராக்யம் அடைய வேண்டும். அப்புறம் ஆத்மாவை அடைந்து, அறிந்து, அனுபவிப்பதன் பொருட்டு குருவையே தஞ்சம் புக வேண்டும் என்று தெளிவாக இருக்கிறது.
குருவையே அடைய வேண்டும் என்று இருப்பதற்கு குருவை அடைந்தே ஆக வேண்டும் என்று பொருள். வேறு வழியே கிடையாது என்று அர்த்தம். அடுத்த மந்திரத்தில் ப்ரஹ்ம ஞானியான அந்த குரு அவனுக்கு ப்ரஹ்ம வித்யையை உள்ளவாறு உபதேசித்து உய்வு தருவார் என்று வருகிறது.
எனவே இந்த வாசகத்துக்கு பாஷ்யம் செய்யும் போது நன்றாக சாஸ்திரங்கள் அறிந்த சாஸ்த்ரஜ்ஞன்கூட சுதந்திரமாக தானே பிரம்ம ஞான ஆராய்ச்சியில் இறங்கக்கூடாது என்று வலியுறுத்தி தெரிவிப்பதற்காகத்தான் குரும் ஏவ- குருவையே - என்று போட்டிருக்கிறது என்று ஆசார்யாள் தெளிவு படுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்குமா?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை
திமுகவின் மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

தெலங்கானாவில் செயல்பாட்டிற்கு வந்த 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


