இறைமகன் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு தந்து, யாரெல்லாம் தன்னை அண்டி வருகின்றார்களோ அவர்களுக்கெல்லாம் அடைக்கலம் தருகின்ற, ஆரோக்கியம் தருகின்ற தன் மகனிடம் பரிந்து பேசுகின்ற தாயாக விளங்கிக்கொண்டுள்ள அன்னை மரியாளின் பெற்றோர் "சுவக்கீன் - அன்னம்மாள்' அவர்களின் ஒருமித்த அன்பைப் போற்றுகின்ற முகமாக, இருவருக்கும் சேர்த்து ஒரே விழாவாக ஆண்டுதோறும் ஜுலை 26ஐ உலக கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
தாவீது மன்னரின் வழி மரபினர் நாசரேத்தில் வாழ்ந்த சுவக்கீன் என்பவரை பெத்லகேமில் பிறந்த அன்னம்மாள் தன் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொண்டார். காலங்கள் உருண்டோடின. தங்கள் வீட்டில் துள்ளி விளையாட, இறைவனின் மகிமையைப் போற்ற குழந்தையின்றி இருந்தனர். ஆனால் ஆண்டவர் மேல் அளவில்லா பற்றும், அன்பும் கொண்டு அவரையே நம்பியதால் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவே கழித்தனர்.
காலம் கனிந்தபோது "என் பெயரை நினைத்து மன்றாடுபவர்களுக்கு நான் செவி கொடுப்பேன் (செக் 13:9)'' என்று வாக்குறுதி அளித்த தந்தையாம் கடவுளின் அருள் அவர்கள் மேல் பொழிந்தது. ஏனெனில் தன் மீட்புத் திட்டத்திற்காக தனது ஒரே மகனான இயேசுவை பிறக்க ஏற்பாடு செய்தார். அப்போது தன் தனிப்பெரும் கொடையாக பிறப்பு நிலை பாவத்திலிருந்து (ஜென்ம பாவம்) விலக்கு அளித்து அன்னை மரியாளை அன்னம்மாள் வயிற்றில் சூல் கொள்ளச் செய்தார்.
"மகப்பேற்றை ஏற்படுத்திய நான் கருப்பையை அடைத்து விடுவேனோ? (எசா 66:9)'' என்ற அருள் வாக்கை மெய்ப்பிக்கும் முகமாக சுவக்கீன் - அன்னம்மாளுக்கு இறைவனின் கொடையாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இறை அருளால் பிறந்த தன் அன்பு மகளுக்கு "மரியாள்' எனப் பெயர் சூட்டினார்கள். அவரை இறை அச்சத்திலும், இறைப்பற்றிலும் வளர்த்து வந்தார்கள்.
"தூயவராம் ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்கு தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார் (லூக் 1:49,50)'' என்று அன்னை மரியாள் இயேசுவை தன் வயிற்றில் கருத்தாங்கியபோது புகழ் பாடல் பாடியது நாம் நினைவு கூரத்தக்கது.
ஏனெனில் தன் பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்கள் அறப்பணிகள் ஆற்றியதாகவும், ஆண்டவருக்கு அஞ்சி தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டதாகவும் அன்னை மரியாள் சான்று பகர்கின்றார். ஆண்டவரின் பேரிரக்கத்தின் காரணமாக வயது முதிர்ந்த தன் பெற்றோருக்கு தான் பிறந்ததும் தன் இளம் வயதில் தன்னை கன்னித் தாயாக அவர் மாற்றியதற்கும் நன்றி பாடல் இசைத்தார்.
எபிரேய மொழியில் சுவக்கீன் என்றால் "இறைவன் தயார் செய்கிறார்' என்றும், "அன்னா' என்றால் "இறைவனின் அருள்' என்றும் பொருள். கடவுள், மீட்புத் திட்டத்தில் பங்கேற்க அன்னை மரியாளை "இறைவனின் அருளால்' (அன்னம்மாள்) "தயார் செய்தார்' (சுவக்கீன்) என்று ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது நம் மெய்சிலிர்க்கிறது.
நம்மை ஈன்ற பெற்றோர்களின் பெற்றோர்களை நினைவு கூர்கின்ற வகையில் இன்றைய முதியவர்களைப் போற்றுவோம். இயேசுவின் தாயாகிய அன்னை மரியாளின் பெற்றோரை புனிதர்களாக்கிய நம் ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



