உத்தவரை மாற்றிய வண்டின் பாடல்!
ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் அநேகம். குழந்தைப் பருவத்திலிருந்தே அவன் லீலைகள் பலரையும் கவர்ந்துவிட்டன.


ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் அநேகம். குழந்தைப் பருவத்திலிருந்தே அவன் லீலைகள் பலரையும் கவர்ந்துவிட்டன. குழந்தை கிருஷ்ணன் தன் வாயில் அண்ட சராசரங்களைக் காட்டி, யசோதையை பிரமிக்க வைத்தான். பூதனா சபதம், காளிங்க நர்த்தனம், கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்து, பசுக்களை மழையிலிருந்து காப்பாற்றுதல் ஆகிய எத்தனையோ லீலைகள் அதிசயம்தான்!
கிருஷ்ணனிடம் கோபியர்க்கு அளவு கடந்த பக்தி, அன்பு, காதல் உண்டு. அது தெய்வீகக் காதல். ரஸகான் எனும் கிருஷ்ண பக்த கவி ""எந்த பகவானை, ஆதிசேஷன், சிவன், பிள்ளையார், இந்திரன் முதலான தேவர்கள் எப்பொழுதும் பூஜிக்கிறார்களோ, யாரை ஆதி அந்தம் இல்லை, உருவம் இல்லை என்று சொல்கிறார்களோ, யாரை நாரத முனி முதல் சுகர் வியாஸர் வரை பாடுகிறார்களோ, கரை கடக்க இயலாது தோற்று விடுகிறார்களோ அந்த பகவானை, இடைச்சிப் பெண்கள் உள்ளங்கை மோரில் கவர்ந்து கட்டி வைக்கிறார்கள்.
இது கோபியர்களுக்கு கிருஷ்ணனிடம் உள்ள, ஆழ்ந்த நிர்மலமான அன்பைக் குறிக்கிறது'' என்கிறார் தம் பாடலில்.ஒருமுறை, கிருஷ்ணன் கோகுலத்தை விட்டு மதுராவுக்குப் போகிறார். அப்பொழுது கிருஷ்ணனை விட்டுப் பிரிந்த விரஹ தாபமானது கோபியர்களை மிகவும் வாட்டுகிறது. பசி இல்லை, சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை... விரஹ தாபத்தினால் துடிக்கிறார்கள். அவ்வழியே வழிப்போக்கர் யாராவது வந்தால், அவரை வழிமறித்து கிருஷ்ணனைப் பற்றி விசாரிக்கிறார்கள். கிருஷ்ணனுடைய தோழன் உத்தவர். அவருக்கு, தான் வழிபடும் முறை - பகவானுக்கு குணமில்லை, உருவம் இல்லை என்ற நிர்குண உபாசன முறைதான் சிறந்தது என்ற கர்வம். அவருடைய கர்வத்தை அடக்கும் பொருட்டு, கிருஷ்ணன், உத்தவரை கோகுலம் அனுப்புகிறார். உத்தவர் வ்ரஜ பூமியான கோகுலத்திற்கு வருகிறார். கோபியர்களை சந்திக்கிறார். கோபியர்கள் வெகு ஆவலுடன் கிருஷ்ணனைப் பற்றி விசாரிக்கிறார்கள்.
அப்போது அங்கு ஒரு வண்டு வருகிறது. வண்டை நடுவராக வைத்துக் கொண்டு உத்தவருக்கும் கோபியர்களுக்குமிடையே ஒரு பட்டிமன்றம் நடக்கிறது. ஆகையால்தான் இதை ப்ரமரகீதம் (வண்டின் கீதம்) என்கிறார்கள். இந்த கீதத்தை சூர்தாஸ், நந்ததாஸ், க்ருஷ்ணதாஸ் உள்ளிட்ட கவிகளும் எழுதியுள்ளனர். அதில் நந்ததாஸ் எழுதிய கீதம் மிகச் சிறந்தது. இது கோபியர்களுக்கும் உத்தவருக்கும் இடையே நடந்த தர்க்கத்தை வெளிப்படுத்துகிறது. முடிவில் உத்தவர் கோபியருடைய தூய பக்தி, அன்பு மயமான வார்த்தைகளைக் கேட்டு, தன்னுடைய ஞான யோகம் முழுமையாக சிதைய, அன்புமயமான பிரேமபக்தியைக் கைக்கொள்கிறார். இந்த கீதமே "ப்ரமர கீதம்' என்ற வண்டின் பாடல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...