வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

அனைவரும் சமம்

மனித இனத்தை ஒரே ஆண் - பெண்ணிலிருந்துதான் இறைவன் படைத்தான். நாம் அனைவரும் ஓர் இனம்...

Updated On :14 நவம்பர் 2013, 3:53 pm IST

மனித இனத்தை ஒரே ஆண் - பெண்ணிலிருந்துதான் இறைவன் படைத்தான். நாம் அனைவரும் ஓர் இனம்; ஓர் குலம். எனவே, மனிதர்களுக்கிடையே உயர்வு - தாழ்வு, குலம் - கோத்திரம், கறுப்பன் -   வெள்ளையன், ஏழை - பணக்காரன், ஆண்டான் - அடிமை மற்றும் மொழி பேதமோ, வேறு எந்த வித பாகுபாடுகளோ காண இயலாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மக்கமா நகரை வெற்றி பெற்ற சமயம். கறுப்பர் மற்றும் அடிமை இனத்தைச் சேர்ந்த பிலால் (ரலி)யிடம், ""புனித கஃபாவின் மீது ஏறி நின்று உரத்த குரலில் நீர் பாங்கு   (தொழுவதற்கு மக்களை அழைப்பது) சொல்வீராக'' எனக்

கூறினார்.

பிலால் (ரலி) பாங்கு சொல்லி முடித்த பின், ""ஹாரிஸ் இப்னு ஹிஸôம்'' என்பவன், ""அடிமையான இக்கறுப்பு காகத்தை விட்டால் நபிக்கு வேறு மனிதனே கிடைக்கவில்லையா?'' என்றான்.

அடுத்து, "உதாப் இப்னு உûஸ' என்பவன், "இப்படிப்பட்ட ஒரு துன்பமான நாள் வருவதற்கு முன்பே எனது தந்தை இறந்துவிட்டார். ஆகையால், இன்று நான் மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன்'' என கேலியாகப்   பேசினான்.

உடனே இறைவன் தனது திருமறையில், அத்.49, வசனம் 13இல், கீழ்க்காணும் ஆயத்தை இறக்கி, ""எவரும் எவரையும்விட உயர்ந்தவர் அல்ல. உயர்வும் - சிறப்பும், இறையச்சத்தினாலும்,   நற்குணங்களாலும்தான் ஏற்படும்'' என்பதைக் கூறி, நபி(ஸல்) மூலமாக அம்மக்களுக்கு விளக்கும்படி உணர்த்தினான்.

""மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணிலிருந்து படைத்தோம். மேலும், நீங்கள் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைப் பல கிளையினராகவும், பல   கோத்திரங்களாகவும் நாம் ஆக்கினோம் (யாராக இருப்பினும்) அல்லாஹ் விடத்தில் நிச்சயமாக உங்களில் மிக்க பய பக்தி உடையவர்தாம். நிச்சயமாக அல்லாஹ் முற்றும் அறிந்தவன் (அனைத்துச்   செய்திகளையும்) நன்கு தெரிந்தவன்''.

நற்குணங்கள் என்பது நபிமார்கள் மற்றும் நல்லோரின் பண்புகளாகும். அவற்றின் மூலமாகத்தான் அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றன. நற்குணம் பிரியத்தையும் பாசத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால், தீய   குணம் வெறுப்பையும், பொறாமையையும் தோற்றுவிக்கிறது.

"மனிதர்களை பெரும்பாலும் சுவனத்தில் சேர்ப்பது இறையச்சமும், நற்குணங்களும்தான்'' என்பது நபிமொழியாகும். இறைவன் தனது திருமறையில் சமத்துவத்தைப் பற்றியும் மிகத் தெளிவாக   அத்.109-வசனம் 6 இல் விளக்கியுள்ளான். "உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு. எங்களுடைய மார்க்கம் எங்களுக்கு''.

சமத்துவம் - சகோதரத்துவம் என்பது இஸ்லாத்தின் அடிப்படை தத்துவமாகவும், மனித பண்பாட்டின் மிக்க மேலானதாகவும் உள்ளது என்பதையே மேற்கண்ட வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

நபிகளார் அறியாமை என்னும் இருளை அகற்றி, மக்களுக்கு அறிவையும், அன்பையும் புகட்டினார்கள். சமத்துவத்தையும் - சகோதரத்துவத்தையும் மேலோங்கச் செய்தார்கள். மனிதர்களிடம்   வேரூன்றியிருந்த "வேற்றுமையை' அகற்றி, "அனைவரும் சமம்' என்ற பேருண்மையை இஸ்லாமிய மார்க்கத்தின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

இஸ்லாம் மார்க்கம் அனைத்து வேறுபாடுகளையும் நீக்கி, சமத்துவத்தையும் -சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தும் நல்வழியினை மக்களுக்கு எடுத்து இயம் புகிறது. எனவே, நாம் அனைவரும் மேற்கண்ட இறையச்சம் - நற்பண்புகள் கொண்ட மனிதப் புனிதர்களாக வாழும் தன்மையை இறைவன் தந்தருள்வானாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.