மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

விஷ்ணு சகஸ்ரநாமம்

விஷ்ணு சகஸ்ரநாமத்தின் உயர்வு பற்றி முக்கூர் லக்ஷ்மி நரசிம்மச்சாரியார் கூறியதைப்பற்றி நாடோடியின் தகவல்:-

Updated On :14 ஆகஸ்ட் 2014, 3:48 pm IST

விஷ்ணு சகஸ்ரநாமத்தின் உயர்வு பற்றி முக்கூர் லக்ஷ்மி நரசிம்மச்சாரியார் கூறியதைப்பற்றி நாடோடியின் தகவல்:-

தர்மங்களைப்பற்றி கூறும் மகாபாரதத்தின் சாரம் விஷ்ணு சகஸ்ர நாமம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லிய கீதையைவிட அவருடைய பக்தர் பீஷ்மர் சொல்லியது விஷ்ணு சகஸ்ரநாமம். இதை இயற்றியவர் வியாசர். விஷ்ணுதான் வியாசர். விஷ்ணு சகஸ்ரநாமத்தைச் சொன்னவர் பீஷ்மர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தருமரை பீஷ்மரிடம் தர்மத்தைப்பற்றி கேட்கச் சொல்கிறார். சகல தர்மங்களையும் அறிந்த பீஷ்மர், அம்புப் படுக்கையில் உலக நன்மைக்காக விஷ்ணு சகஸ்ரநாமம் உபதேசிக்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் வியாதிகள் குணமாகி மன அமைதி கிடைக்கிறது. மேலும், பகவத் கீதைக்கு ஒப்பான விஷ்ணு சகஸ்ரநாமம், புரிந்து கொள்வதற்கும், பாராயணம் செய்வதற்கும் எளிதாக அமைந்திருக்கிறது. தனியாகவோ பலர் சேர்ந்தோ சொல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.