பங்களாதேஷின் சிட்டகாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது பவானி தேவியின் ஆலயம். தாக்ஷôயணியின் உடற்கூறுகளில் வலது கரம் விழுந்த இடமாகக் கருதப்படும் இது, சக்திபீட வரிசையில் 50வது பீடமாக விளங்குகிறது.
கேதார பீடம் அல்லது சட்டலபீடம் என்று அழைக்கப்படும் இம்மகாசக்தி பீடத்தில் எழுந்தருளியுள்ள அன்னையின் திருநாமம் பவானி. ஷேத்ரபாலர் சந்திரசேகரர்.
சிட்டகாங் சாந்த்பூர் ரயில் பாதையில், சிட்டகாங் நகரத்திலிருந்து 37வது கி.மீ. தொலைவில் சீதாகுண்ட் என்ற ரயில் நிலையத்தில் இறங்கி மலை மீது ஏறினால் சக்திபீட கோயிலை அடையலாம். இம்மலையின் உச்சியில் சீதாகுண்டம் உள்ளது. இதன் நீர் வருடம் முழுவதும் உஷ்ணமாகவே இருக்கும். மேலும் இம்மலையில் வியாசர்குண்ட், சூர்யகுண்ட், லவணக்ஷ தீர்த்தம் ஆகிய நீர் நிலைகளும் உள்ளன.
தாருகன் எனும் அரக்கனை வதம் செய்வதற்கு சிவனால் படைக்கப்பட்டவள் காளி. அவனை வதம் செய்த பின்பும் அவள் கோபம் தணியவில்லை. அவளது கோபாக்கினி ஈரேழு பதினாலு உலகத்தாரையும் வாட்டியது. காளியின் கோபத்தைத் தணிக்க பரமசிவன் எண்ணினார். உலக நன்மையின் பொருட்டு அன்னையின் கோபத்தை அடக்க சடலம் போல் தரையில் படுத்திருந்தார். ஆவேசத்தினால் அன்னை ஈசனின் மார்பில் ஏறி நின்று தாண்டவம் ஆடினாள்.
காளியின் கால்களால் மிதியுண்ட சிவபெருமான், ஒரு கைக்குழந்தையாக மாறி அழுகுரல் எழுப்பவே, உடனே காளிதேவி மனம் இரங்கி கருணை பொழிந்து, குழந்தையான ஈசனை மார்போடு அணைத்தாள். அதன் பின்னரே அன்னை சாந்தமடைந்தாள்.
சீதாகுண்ட் மலையையே அங்குள்ளோர் சக்திபீடமாகக் கருதினாலும், பவானி அன்னையை வழிபட அங்கு ஒரு சிறு கோயிலும் உண்டு. அங்கு காணப்படும் கருவறையில் பவானிதேவி தட்சிணகாளி ரூபத்தில் திவ்ய தரிசனம் தருகிறாள். (அதாவது சிவன் சடலமாகப் படுத்திருக்க அவர் மேல் கால் பதித்துக் காட்சி அளிக்கும் காளியின் தரிசனம்).
சந்திரநாத் அல்லது சந்திரசேகர் எனும் திருநாமம் கொண்ட சிவன் கோயிலும், பெüத்தர் அடிச்சுவடு கொண்ட கோயிலும் இங்கு காணலாம். ஆண்டுதோறும் பிப்ரவரியில் சிவசதுர்த்தசி எனும் பெயரில் இங்கு நடத்தப்படும் 10 நாள் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


