நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

23 கருடசேவை திருவிழா தஞ்சையில் கோலாகலம்!

பொதுவாக பெருமாள் கோயில்களில் நடைபெறும் பிரம்மோத்சவத்தில் ஒரு நாள் கருடசேவை நடைபெறுவது வழக்கம்.

News image
Updated On :12 ஜூன் 2014, 11:27 am

இரா. இரகுநாதன்

பொதுவாக பெருமாள் கோயில்களில் நடைபெறும் பிரம்மோத்சவத்தில் ஒரு நாள் கருடசேவை நடைபெறுவது வழக்கம். மற்றபடி சீர்காழி திருநாங்கூரில் 11 கருடசேவை; குடந்தையில் அட்சய திருதியை அன்று நடைபெறும் 12 கருடசேவை; காஞ்சீபுரம் கூழம் பந்தலில் 15 கருடசேவை என சிறப்பாக நடந்தாலும், தஞ்சையில் நடைபெறும் 23 கருடசேவையே வரலாற்றோடு தொடர்புடைய விழாவாகும்.

வைணவக் கோயில்களில் அதிக அளவில் கருடசேவை ஒரேநேரத்தில் நடைபெறுவது தஞ்சை திவ்ய தேசத்தில்தான்! வெளி உலகுக்கு பெரிதும் தெரியாத புகழ் பெற்ற திருவிழா இது.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரைப் பகுதியில் அமைந்துள்ள தஞ்சை நீலமேகப் பெருமாள் மணிகுன்றப் பெருமாள், வீரசிங்கப்பெருமாள் ஆகிய மூன்று கோயில்களும் வைணவ திவ்ய தேச வரலாற்றுடன் தொடர்புடையது. பூதத்தாழ்வார் நம்மாழ்வார் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்து பாடப்பட்ட இத்தலத்தில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ததும், 108 திவ்ய தேசப் பெருமாளும் இங்கு கருட வாகனத்தில் எழுந்தருளி அவருக்குக் காட்சி கொடுத்ததாக செவி வழிச் செய்தி உண்டு. அவ்வாறு ஆழ்வாருக்குக் காட்சி தந்த நாள் ஒரு வைகாசி திருவோணம் ஆகும். இதை நினைவு கூறும் பொருட்டு 23 கருட சேவை நடைபெறுகிறது.

இந்த கருட சேவையில் மக்களோடு மக்களாக திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துகொண்டு செல்ல அருள்மிகு நீலமேகப்பெருமாள் உற்சவர் நாராயணனும் ஆண்டாளும் கருட வாகனத்தில் முன்னேவர, தொடர்ந்து வீரசிங்கப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள் என அனைவரும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக 23 கருட வாகனங்களில் காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.

இவ்வாண்டு இவ்வைபவம் 18-6-2014 அன்று நடைபெறுகிறது. இந்த கருடசேவையை தரிசனம் செய்தவர்கள் நான்கு அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் பெறுவார்கள் என்றும் அவர்கள் மீதான தோஷங்கள் எதுவாக இருந்தாலும் கருட நிழல் பட்ட பாம்பைப் போல் காற்றில் கலந்துபோகும் என்றும் பலன் கூறப்படுகிறது. நாமும் அந்நாளில் தஞ்சை சென்று இந்த அரிய கருட சேவையை தரிசித்து பெறும் பேற்றை அடைவோமாக

தொடர்புக்கு: 04362-223384 274476.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.