நாம் யார்?
உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் தங்களைப் பற்றி மிக உயர்வாக எப்போதும் எண்ணிக்கொள்கிறார்கள்.


உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் தங்களைப் பற்றி மிக உயர்வாக எப்போதும் எண்ணிக்கொள்கிறார்கள். இதில் சிலர் தாங்கள்தான் அதிகம் செல்வம் படைத்தவர்கள் என்றும், சிலர் அழகு மிகுந்தவர்கள் என்றும் சிலர் அறிவாளிகள் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள். இதில் மூன்றாவது எல்லோருக்கும் மிகவும் இயல்பான ஒன்று.
இவர்களில் பெரும்பாலோர் கடவுள் இல்லை என்றும் கடவுள் இருப்பதை நிரூபியுங்கள் என்றும் சவால் விடுவார்கள். இதில் இன்னும் சில படிகள் மேலே போய் "நான் கேட்கிறேன் இவர் பதில் சொல்வாரா அவர் பதில் சொல்வாரா" என்று கேட்டு நச்சரித்துக் கொண்டிருப்பார்கள்.
இப்படிப்பட்ட சிலர்தான் இயேசுவின் காலத்திலும் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இயேசுவின் போதனைகளைக் கேட்டு மன அமைதி பெற்றவர்கள் பலர். அவரால் குணம் பெற்றவர்கள் பலர். ஆனால் குறிப்பிட்ட சில மனிதர்கள் மட்டும் இயேசுவை எப்படியாவது மடக்கி விடவேண்டும்; அவரை ஏதாவது சிக்கலில் மாட்டி வைத்துவிட வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டேயிருந்தார்கள்.
இப்படிப்பட்டவர்கள் பணத்தை மையப்படுத்தி வாழ்பவர்கள். இவர்களுக்கு மனிதர்கள் தேவையில்லை. ஆனால் இயேசுவுக்கோ மனிதர்கள் முக்கியமானவர்களாக இருந்தார்கள். அவர்களது நல்வாழ்வைப் பற்றிய அக்கறையுடன் தமது பணிகளை மேற்கொண்டார். உலகில் மனிதநேயமும் இரக்க சிந்தனையும் பிறரை மன்னிக்கும் மனப்பான்மையும் வளர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் இயேசுபிரான்.
இதைத்தான் இயேசு தெளிவாகக் குறிப்பிட்டார் : ""பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் பிறருக்குச் செய்யுங்கள். அப்போது நீங்களும் வாழ்வீர்கள், மற்றவர்களும் வாழ்வார்கள்.''
நாம் பிறரை அன்பு செய்து வாழ்கிறோமா அல்லது பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை ஆகியவற்றுக்கு அடிமையாகி இயேசுவின் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்கிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
மேற்கண்ட ஆசைகளைத் துறந்து இயேசுவோடு ஐக்கியமாகி வாழ்கிறோமா என்று நம்மை நாமே எடை போட்டுப் பார்ப்போம்.
அப்போது தெரிய வரும், நாம் யார் என்று?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...