புஷ்கரில் பிரம்மாவின் திருக்கோயில்!

அடிமுடி காண முடியாத சிவனிடம் முடியைக் கண்டதாகப் பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோயிலே இருக்கக் கூடாது என்று சிவன் சாபமிட்டார்.
புஷ்கரில் பிரம்மாவின் திருக்கோயில்!
Published on
Updated on
1 min read

அடிமுடி காண முடியாத சிவனிடம் முடியைக் கண்டதாகப் பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோயிலே இருக்கக் கூடாது என்று சிவன் சாபமிட்டார்.

அதனால் மிகவும் கலங்கிப்போன பிரம்மா மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் தனக்கும் பூமியில் ஒரு கோயில் வேண்டும் என்று வேண்டினார். சிவன் மனமிரங்கி ஒரு தாமரை மலரை பிரம்மாவிடம் கொடுத்து, "போகும் இடமெல்லாம் கையில் கொண்டு போகும்படியும் பூ எங்கு கரத்திலிருந்து விழுகிறதோ அங்கு உனக்கு கோயில் உண்டாகும்' என்று ஆசி அருளினார். பிரம்மா தாமரையை கையில் ஏந்தி பல்வேறு இடங்களில் சுற்றி வந்தார். ஓரிடத்தில் பூ கரத்திலிருந்து விழுந்தது. பூ விழுந்த அந்த இடமே புஷ்கர் (புஷ்- புஷ்பம்) (கரம் -கை) ஆயிற்று.

ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மிருக்கு 12 கி.மீ தூரத்தில் உள்ளது புஷ்கர். இங்கு பிரம்ம சரோவர் ஏரி உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் இதில் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். தண்ணீரும் கரும்பச்சை, இளம் பச்சை, வெண்மை நிறமாக இருக்கும். இங்கு பித்ரு காரியங்கள் செய்வார்கள்.

ஏரியில் இறைவன் உறைந்திருப்பதாகக் கருதப்படுவதால் அதில் யாரும் ஸ்நானம் செய்யக்கூடாது. ஆனால் படித்துறையில் அமர்ந்து தண்ணீரை மொண்டு குளிக்கலாம் என்பார்கள்.

பிரம்மா யாகம் செய்ய எண்ணினார். மனைவி உடன் இல்லாதபோது செய்யக்கூடாது என்று, மானச புத்திரரான நாரதரை தேவலோகம் அனுப்பி சாவித்திரி தேவியை அழைத்து வரச் சொன்னார். சாவித்திரி தேவி வரத்தாமதமானதால், தானே ஒரு பெண்ணை சிருஷ்டித்து யாகத்தை முடித்தார். சாவித்திரி தேவி தன் கணவருடன் வேறு ஒருபெண் இருப்பதைக் கண்டு கோபம் கொண்டு "பிரம்மாவிற்குப் பூலோகத்தில் கோயிலே இருக்கக் கூடாது' என்று சாபம் இட்டதாகவும் தேவர்கள் வேண்டிக் கொண்டதால் புஷ்கரில் மட்டும் கோயில் அமைந்திருக்க அனுமதித்தார் என்பதும் செவி வழித் தகவல். இங்குப் பிரம்மாவிற்கு அருகில் காயத்திரி தேவி வீற்றிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com