

கிறித்துவர்களின் வேத நூலான பைபிள், வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் வெவ்வேறு துறையை சார்ந்த மானிடர் அனைவருக்குமே தகுந்த அறிவுரைகள் கூறி, நெறிபடுத்த உதவும் வாழ்வின் வழிகாட்டியாகத் திகழ்கிறது.
தன்னைப் பின்பற்ற விரும்பும் எவருக்குமே இறைமகன் இயேசு கடைபிடிக்குமாறு கொடுத்த கட்டளைகள் இவை: விபசாரம் செய்யாதே; கொலை செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; உன் தாய் தந்தையை மதித்து நட (லுக்கா 18:20).
குழந்தைகளை பாவ வாழ்க்கையில் ஈடுபடுத்தும் கொடியோரைக் கடுமையாகச் சாடுகிறது பைபிள். "இச்சிறியோரில் எவரையாவது பாவத்தில் விழச் செய்வதைவிட, அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டி அவனைக் கடலில் தள்ளி விடுவது அவனுக்கு நல்லது (லுக்கா 17:2).
கடவுளுக்கு ஏற்றவாறு நடக்கும் மனிதர் அரசாங்கத்துக்குரிய கடமைகளையும் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்பதிலும் பைபிள் மக்களை வலியுறுத்துகிறது. அக்கால யூதர்கள் ரோமப் பேரரசின் அங்கமாக இருந்தார்கள். எனவே சீசருக்கு வரி செலுத்துவது முறையா... இல்லையா? என்று கேட்ட மக்களிடம் "சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றை கடவுளுக்கும் கொடுங்கள்' என்று இயேசு கூறினார் (மாற்கு 16,17).
தனக்கு அன்பு செய்பவருக்கு அன்பு காட்டுவது மனித இயல்பு. ஆனால் பைபிளில் கூறப்படுவது அதனைவிட ஒருபடி மேலான அன்பு. "உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள். உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களை சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்' (மத்தேயு 5:44).
"ஆம்! வல்லதேவன் நல்லோருக்கும் பொல்லாருக்கும் இடையே எந்தவித வேறுபாடும் காட்டாமல் மழை பொழியச் செய்வதில்லையா? தென்றல் வீசச் செய்வதில்லையா? கதிரவனை ஒளி வீசச் செய்வதில்லையா? அதுபோன்று நீங்களும் தீமை செய்தோருக்கும் நன்மை செய்யுங்கள்' என்று பைபிளில் கூறப்பட்டிருக்கிறது.
வாழ்க்கையில் உயர்வடைய வேண்டுமென்றால் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை, "நீதிமொழிகள்' என்னும் பகுதி விளக்குகிறது. "ஒருவர் ஆதரவின்றி இருக்கிறார் என்பதற்காக அவரை நீதிமன்றத்தில் சிறுமைபடுத்தாதே. கடுஞ்சினம் கொள்பவனோடு நட்புக் கொள்ளாதே. பிறர் கடனுக்காக ஒருபோதும் பின்னணியாக நிற்காதே. நாவைக் காப்பவர் தம் உயிரைக் காத்துக் கொள்கிறார். நாவைக் காவாதவர் கெட்டழிவார். உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதல் பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு. அப்போது உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்.
பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்கு மதிப்பும் மரியாதையும் காட்ட கடமைப்பட்டுள்ளனர். என்பதையும் பைபிள் தெளிவாகக் கூறுகிறது. "உன்தந்தையை முழு உள்ளத்துடன் மதித்து நட. உன் தாயின் பேறுகாலத் துன்பத்தை மறவாதே. அவர்கள் உன்னைப் பெற்றெடுத்தார்கள். அதற்கு ஈடாக உன்னால் எதையும் செய்ய முடியாது என்பதை நினைவில் இருத்து (சீராக் 7:27,28). தந்தையை கைவிடுவோர் கடவுளைப் பழிப்பவர் போன்றவர். அன்னையர்க்கு சின மூட்டுவோர் ஆண்டவரால் சபிக்கப்படுவர் (சீராக் 3:16).
பைபிளில் கூறப்பட்டுள்ள மேற்கூறிய அறிவுரைகளைப் பின்பற்றும் அனைவரும் ஒரு முழுமை பெற்றவராகத் திகழ்வர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இஷான் கிஷன் நியமனம்!
'சீட் இல்லை' திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா!
தினப்பலன்கள் - விருச்சிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் சரிந்து ரூ. 92.58 ஆக நிறைவு!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

