ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முல்லை மரகதத்திற்கு குடமுழுக்கு!

ஐவகை நிலத்தில் முல்லை நிலத்தின் கடவுள் திருமால் ஆகும். ஒரு பெண்ணுக்கு சர்வ சுதந்திரங்களும் சக்தியும் தாய் வீட்டில் கிடைக்கும்.

News image
Updated On :25 ஜனவரி 2018, 6:30 pm

ஐவகை நிலத்தில் முல்லை நிலத்தின் கடவுள் திருமால் ஆகும். ஒரு பெண்ணுக்கு சர்வ சுதந்திரங்களும் சக்தியும் தாய் வீட்டில் கிடைக்கும். திருமாலின் சகோதரியான அன்னை பார்வதி தவம் செய்வதற்காக முல்லைக்கொடிகள் பச்சை பசேல் என அடர்ந்திருந்த வனத்தில் மரகத மணிப் பல்லக்கில் வந்து நின்றாள். மரகதம் என்றால் பச்சை என நாட்டு வழக்கில் அழைக்கப்படும் . ஆதலால் மரகதாம்பாள், "பச்சையம்மன்' என நாட்டுப்புற வழக்கில் அழைக்கப்பட்டாள்.

தவம் செய்ய தேர்ந்தெடுத்த இடத்தில் உமையம்மை சிவகங்கை, சூரியபுஷ்கரணி என்னும் சக்தி தீர்த்தத்தை உருவாக்கினாள். அந்தத் திருக்குளத்தின் கரையில் மக்களுக்கும் தேவர்களுக்கும் அல்லல் கொடுத்து வந்த ஹதாசுரன், அவனது படைகள், படைத்துணை மஹாபூதம் ஆகியோரை 
அழித்தாள்.

அவ்விடத்தில் கோயில் அமைக்கப்பட்டு அதன் கரையினை சாலையாக்கி ஒரு புறம் குளமும் மறுபுறம் கோயிலும் அமைந்தது. அந்த தீர்த்தமே அபிஷேகம், கரகம் ஆகியவற்றுக்குப் பயன்படுவதோடு கோயிலின் பராமரிப்பிலும் நேர்த்திக் கடன் செலுத்த விரும்பும் தீர்த்தமாகவும் உருவாகியது.

சீறும் சிறப்பும் மிக்க அன்னை பரமேஸ்வரி சிலா வடிவில் காட்சி தரும் முன், இங்கு வந்து காலடி பதித்த தலம் இது. அவள் காலடி பட்டதால் மண் எல்லாம் முல்லையாய் முகிழ்த்து மணம் வீசிச் சிறந்தன. அதுவே திருமுல்லைவாயில் என அழைக்கப்பட்டது. அவள் சிவபூஜையும் தவமும் செய்ய தேர்ந்தெடுத்த இடத்திற்கு அவளுக்குத் துணையாக அவளோடு தொடர்புடைய மன்மதன் ரதி, பெருமாள், முடியால் அழகி பூங்குறத்தி, விநாயகர், பைரவர், திருமால் பெரிய மீசையுடன் வாழ்முனியாக அமர்ந்திருக்க, எதிரில் சுக ரிஷியும் கருடாழ்வாரும் துணை நின்றனர். 

செம்முனி முதல் ஆறு முனிகளும் அமர்ந்து காவல் காக்க எதிரில் அவர்களது குதிரை முதலிய வாகனங்கள் தயார் நிலையில் அணிவகுத்து நின்றனர். எதிரில் திறந்த வெளியில் பச்சையம்மன் சந்நிதிக்கு முன்புறம் கெüதமமுனிவர் சிவலிங்க உருவோடு நின்ற கோலத்தில் அருள, இவருக்கு வலப்புறம் பச்சையம்மன், மன்னாதீஸ்வரர் மற்றும் அகோர வீரபத்திரரும் எழுந்தருளினர். இந்நிலையில் தன் தவம் முடித்த இடத்தில் தன் பரிவாரங்களுடன் எழுந்தருளினாள் அன்னை பச்சையம்மன். 

தவம் செய்ய அமர்ந்த இடத்திலிருந்து அவளது அருள் ராஜ்ஜியம் துவங்கியது. மணம் முடியாதோருக்கு மணமும் மகவு இல்லாதோருக்கு மகவும் நீதி வேண்டுவோருக்கும் நிதி வேண்டுவோருக்கும் அனைத்தையும் அருளும் செயலைச் செய்யத் துவங்கினாள். பலன் பெற்ற பலர் பணிந்து வந்து தங்கள் நன்றியைக் காணிக்கையாகச் செய்யத் துவங்கினர். திக்கெட்டும் பரவத் துவங்கிய அவளது புகழ் தரணியெங்கும் தெரிந்து குறை தீர்க்க வேண்டி பக்தர்கள் வரவு அதிகரித்தது.

தினமும் காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை4.30 முதல் இரவு 8.30 வரையும்; செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாள்களில் சிறப்பு தரிசனம் செய்ய சிறந்த நாள்களாகக் கருதப்பட்டு வணங்குவோர்களின் குறை தீர்ப்பவளானாள். 

சென்னை, அம்பத்தூரிலிருந்து ஆவடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் வலது புறத்தில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 100 அடி தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைமலையம்மன் திருக்கோயில். இவ்வாலயத்துக்கு குடமுழுக்கு செய்து 12 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும் இறைஅருள் கைகூட்ட தேவையான மராமத்து பணிகளும் திருப்பணிகளும் துவங்கப்பட்டு முடிக்கப்பட்டு குடமுழுக்கு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 

ஜனவரி-25, அன்று மாலை முதல் முதலாம் யாகசாலை பூஜை துவங்கி ஜனவரி-26, 27 தேதிகளில் நடைபெறுகின்றன. ஜனவரி-28 ஆம் தேதி, அதிகாலையில் 6 ஆம் கால யாக சாலை பூஜை நடந்து அனைத்து விமானங்கள் ராஜகோபுரம் ஆகியவற்றுக்குக் காலை 9.30 மணிக்கு மேல் கும்பாபிஷேகமும் தொடர்ந்து மூல சந்நிதி மூர்த்தங்களுக்கு குடமுழுக்கும் நடைபெறுகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.