நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அன்பும் அருளும் பொழியும் "பிரேமிக விட்டலன்'

மராட்டிய மொழியில் "வீட்' என்றால் செங்கல் என்பது பொருள்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2020, 12:30 am

இரா. இரகுநாதன்


மராட்டிய மொழியில் "வீட்' என்றால் செங்கல் என்பது பொருள். பண்டரிபுரத்தில் குக்குட முனிவர் ஆசிரமத்தில் தங்கியிருந்த புண்டரீகன்  மனம் திருந்தி பெற்றோர்களுக்கு சேவை செய்வதையே முக்கிய கடமையாகக்  கொண்டு வாழத் துவங்கினான். 

அவனது பெற்றோர் பக்தியை உலகுக்கு விளக்க விரும்பினார் கிருஷ்ணன். ஒருநாள் ருக்மணியும், கிருஷ்ணரும் புண்டரீகன் இல்லத்திற்கு வந்து, வாயிலில் நின்று அழைத்தனர். பெய்திருந்த  மழையினால் முன்புறம் சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளே பெற்றோருக்கு பணிவிடை செய்துகொண்டிருந்த புண்டரீகன் இரு  செங்கற்களை  எடுத்து கிருஷ்ணரின் முன்னால்  போட்டு "இதன்மீது நில்லுங்கள்;  தாய்தந்தையர் பணி முடித்து  வருகிறேன்' என்று சென்று விட்டான். 
அவனது பெற்றோர் சேவையைக் கண்டு  மகிழ்ந்த கண்ணன் அவனிடம் "என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்டார். "நீங்கள்  நிரந்தரமாக இங்கே காட்சி கொடுக்க வேண்டும். இங்கே செங்கல்லின் மீது நீங்கள்  நின்றதால் "விட்டலன்' என்ற பெயர் உங்களுக்கு வழங்க வேண்டும்' என கேட்டான். அவ்வாறே அருளினார் கண்ணன். புண்டரீகனின் பெயரால் அந்த ஊர் பண்டரிபுரம் எனவும் அழைக்கப்பட்டது. 

தமிழகத்தில் கிருஷ்ணதேவராயரின் காலத்தில் (கி.பி 1507}1529) தொண்டை நாட்டின் ஒரு பகுதியை ஆண்டுவந்த  கொண்டைய தேவ மகாராஜா காலத்தில் விட்டலாபுரம் என்ற பெயருடன் ஓர் ஊர் உருவானது. ஊரின்  பிரதான கடவுளாக ஸ்ரீவிட்டலர்  எழுந்தருள்விக்கப்பட்டார் . கி.பி. 1558}இல் சதாசிவராயர்  காலத்தில் கோயில் திருப்பணி மீண்டும் மேற்கொள்ளப்பட்டு விட்டலன் வீதிகளில் பவனி வருவதற்காக தேர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. 

பழுதுற்ற கோயிலை, பாண்டுரங்கன் கைங்கர்யசபை மூலம் முழுவதுமாக எடுத்துக்கட்டி 5.9.2006}இல் குடமுழுக்கும் நடைபெற்று பூஜை போன்றவை குறைவின்றி நடந்து வருகின்றன. 

இக்கோயில் கருவறையில் ருக்மணி சத்தியபாமா சமேத பிரேமிக விட்டலன் நின்ற கோலத்தில் இருந்து அருளுகின்றனர். மூலவர் பெயர் பிரேமிக விட்டலன் என்பதாகும். பிரேமிக என்பதற்கு அன்பானவன், கருணைமிகுந்தவன், ஆசையுள்ளவன், என்பவை பொருளாகும். தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7.30 வரையும் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். ஏகாதசி தினங்களில் பகல் 12 மணி வரை தரிசனம் செய்ய முடியும். ஆகஸ்ட் 11}இல் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. 

விட்டலாபுரம்  செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இருந்து நெரும்பூர் திருக்கழுகுன்றம் வழித்தடத்தில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு: 96000 42690. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.