2021: ஆங்கிலப் புத்தாண்டில் ஏற்படும் பலாபலன்களின் சுருக்கம்
முதல் ஆறு மாதங்கள் தொழில்துறை சற்று மந்தமான நிலைமையில் இருக்கும். பிற்பகுதியில் தொழில்துறையில் விறுவிறுப்பாக முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்கள் தாங்களாகவே பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.


முதல் ஆறு மாதங்கள் தொழில்துறை சற்று மந்தமான நிலைமையில் இருக்கும். பிற்பகுதியில் தொழில்துறையில் விறுவிறுப்பாக முன்னேற்றம் உண்டாகும். தொழிலாளர்கள் தாங்களாகவே பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.
மக்களின் வாழ்க்கைத் தரமும் படிப்படியாக உயரத் தொடங்கும். பொருளாதாரம் படிப்படியாக உயர்ந்து நல்ல நிலைமையை எட்டி விடும்.
விவசாயத்துறையும் அதனுடன் சம்பந்தப்பட்ட துறைகளும் சேர்ந்தே வளரத் தொடங்கும். விவசாயிகள் உடனுக்குடன் மானியங்களைப் பெறுவார்கள்.
நமது பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் உயரும். பல கல்லூரிகள் சிறப்பான கல்வி மையங்களாக அறிவிக்கப்படும். இணையவழிக் கல்வி முறை பல நுட்பமான பாடப் பிரிவுகளிலும் தொடங்கப்படும்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் பல நுட்பமான விஷயங்கள் வெளிக்கொணரப்படும்.
நாடகம், திரைப்படத்துறை, பத்திரிகை, ஊடகம், சமூக வலைதளம் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உண்டாகும்.
அறிவுசார் காப்பீட்டுத் துறையில் நமது கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெறும்.
கனரக வாகனங்கள், ரயில்வே மற்றும் பொதுத்துறைகள் இரட்டிப்பு வளர்ச்சி காணத் தொடங்கும்.
பகைவர்களும் ஒதுங்கி இருப்பார்கள்.
வெளிநாடுகளில் நமது பெயர், புகழ் உயர்ந்து காணப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...